இலங்கை மத்திய வங்கி, இலங்கை சனநாயக சோ~லிசக் குடியரசின் சார்பில் 2019 மாச்சு 7ஆம் நாளன்று, புதிய வழங்கல்களான 5 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.0 பில்லியன் மற்றும் 10 ஆண்டு காலப்பகுதிக்கான ஐ.அ.டொலர் 1.4 பில்லியன் கொண்ட மூத்த பிணையிடப்படாத நிலையான வீதத்தினைக் கொண்ட முறிகளை வெற்றிகரமாக விலையிட்டதன் மூலமும் முறையே 2024 மாச்சு 14ஆம் நாள் மற்றும் 2029 மாச்சு 14ஆம் நாள் முதிர்ச்சிகளுடன் வழங்கியதன் மூலமும் ஐ.அ.டொலர் முறிச் சந்தைக்கு இலங்கை திரும்பியது. முறிகள் மூடிஸ் இன்வெஸ்டர் சேர்விஸ், ஸ்டான்டட் அன்ட் புவர் மற்றும் பிட்ஜ் றேற்றிங்ஸ் என்பனவற்றினால் 'B2', 'B' மற்றும் 'B' இல் முறையே தரமிடப்பட்டுள்ளன.
இது, 2007 இற்குப் பின்னர் பன்னாட்டு முறிச் சந்தைகளில் இலங்கையின் பதின் மூன்றாவது ஐ.அ.டொலர் அடிப்படை அளவுக் குறியீட்டினைக் குறிப்பதாகவும் கடந்த பல ஆண்டுகளாக இலங்கைக்கு பன்னாட்டு முதலீட்டாளர்கள் சமூகம் தொடர்ச்சியாக அளித்துவரும் ஆதரவை பிரதிபலிப்பதாகவும் காணப்படுகிறது. பீஓசி இன்ரந~னல், சிற்றிகுறூப், டியூச் வங்கி, எச்எஸ்பீசி, ஜே.பி. மோர்கன், எஸ்எம்பீசி நிக்கோ மற்றும் ஸ்டான்ட் சார்ட்டட் வங்கி என்பன வெற்றிகரமான கொடுக்கல்வாங்கல்களின் கூட்டு முதன்மை முகாமையாளர்களாகவும் ஏட்டுப் பதிவாளர்களாகவும் தொழிற்பட்டனர்.
வலுவான சந்தைப் பின்னணியினையும் இலங்கையின் விரிவாக்கப்பட்ட நிதிய வசதியின் ஐந்தாவது மீளாய்வின் மீது ப.நா. நிதியின் அலுவலர் மட்டத்தில் அண்மையில் உருவாக்கப்பட்ட சாதகமான சூழலொன்றினையும் பயன்படுத்திக் கொள்ளும் விதத்தில் இலங்கை 2019 மாச்சு 07ஆம் நாளன்று ஆசியாவின் காலைப்பொழுதில் கொடுக்கல்வாங்கல்கள் பற்றி அறிவித்தது. கூட்டாண்மையாளர்கள் புதிய 5 ஆண்டுகள் மற்றும் 10 ஆண்டுகளைக் கொண்ட தொகுதிகளில் முறையே 7.20 சதவீதம் மற்றும் 8.20 சதவீதங்களில் நியதிகளையும் ஆரம்ப விலை வழிகாட்டல்களையும் வழங்கின. இக்கொடுக்கல்வாங்கல்கள் உயர்தரம் வாய்ந்த பரந்தளவிலான முதலீட்டாளர்களின் வலுவான ஈடுபாட்டினைக் காட்டியதுடன், இது, இறுதி விலை வழிகாட்டல்களை புதிய 5 ஆண்டுகளுக்கு 6.90 சதவீதத்திற்கும் (+/- 5 அடிப்படைப் புள்ளிகள்) 10 ஆண்டுத் தொகுதியின் மீது 7.90 சதவீதத்திற்கும் (+/- 5 அடிப்படைப் புள்ளிகள்) இறுக்கமாக்கியது. இறுதியாக முறிகள், நியூயோர்க் மணித்தியாலங்களின் போது புதிய 5 ஆண்டு மற்றும் 10 ஆண்டு தொகுதிகளுக்காக முறையே 6.85 சதவீதம் மற்றும் 7.85 சதவீத விளைவுகளுக்குள் இறுக்கமாக்கப்பட்டிருந்ததுடன் இரண்டு தொகுதிகளுக்குமான விலைகள் ஆரம்ப வழிகாட்டல்களிலிருந்து 35 அடிப்படைப் புள்ளிகளுக்குள்ளே விலையிடப்பட்டடிருந்தமையினைப் பிரதிபலித்தது.
இறுதிக் கட்டளைப் பதிவேடுகள் ஐ.அ.டொலர் 2.7 பில்லியனுக்கு மேலாக அமைந்து 5 ஆண்டுத் தொகுதிக்கான 190 கணக்குகளிலும் ஐ.அ.டொலர் 4.8 பில்லியனுக்கு மேலாக அமைந்து 10 ஆண்டு தொகுதிக்கான 252 கணக்குகளிலும் பரந்து காணப்பட்டது. இது இலங்கை மீதும் அதன் பொருளாதார தோற்றப்பாட்டின் மீதும் முதலீட்டாளர்களின் தொடர்ச்சியாக வைத்திருந்த நம்பிக்கையினை தெளிவாக பிரதிபலித்தது.
கட்டளைப் பதிவேடுகள் இரண்டு தொகுதிகளிலும் நன்கு பன்முகப்படுத்தப்பட்டு காணப்பட்டது. 5 ஆண்டுத் தொகுதியில் 39 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் 38 சதவீதம் ஐரோப்பாவிற்கும் எஞ்சிய 23 சதவீதம் ஆசியாவிற்கும் ஒதுக்கப்பட்டுக் காணப்பட்டது. முதலீட்டாளர் வகையின்படி, 91 சதவீத நிதி முகாமையாளர்களும் 5 சதவீதப் பங்கினை காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியங்களும் 3 சதவீதத்தினை வங்கிகளும் 1 சதவீதத்தினை ஏனைய முதலீட்டாளர்களும் பகிர்ந்து கொண்டனர். 10 ஆண்டு காலத்தொகுதியில் 44 சதவீதம் ஐக்கிய அமெரிக்காவிற்கும் 39 சதவீதம் ஐரோப்பாவிற்கும் எஞ்சிய 17 சதவீதம் ஆசியாவிற்கும் ஒதுக்கப்பட்டமையினைக் காட்டியது. முதலீட்டாளர் வகைப்படி, 90 சதவீதமான பங்கினை நிதிய முகாமையாளர்களும் 5 சதவீதத்தினை காப்புறுதி மற்றும் ஓய்வூதிய நிதியங்களும் 4 சதவீதத்தினை வங்கிகளும் 1 சதவீதத்தினை ஏனைய முதலீட்டாளர்களும் பகிர்ந்து கொண்டன.
சிங்கப்பூர் எக்ஸ்சேன்ஜ் செக்குறிட்டீஸ் ரேடிங் லிமிடெட்டில் முறிகள் பட்டியலிடப்பட்டு விலைக்குறிப்பீடுகள் மேற்கொள்ளப்படுவதற்காக சிங்கப்பூர் எக்ஸ்சேன்ஜ் செக்குறிட்டீஸ் ரேடிங் லிமிடெட்டில் பட்டியலிடப்படுவதற்குப் புறம்பாக, லண்டன் பங்குச் சந்தையின் பன்னாட்டு பிணையங்கள் சந்தையில் அனுமதிக்கப்படுவதற்காக இலண்டன் பங்குப் பரிவர்த்தனையில் இலங்கை முறிகளை முதற்றடவையாக பட்டியலிடப்படுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.
குறிப்பு:
இப்பத்திரிகை வெளியீடு ஐக்கிய அமெரிக்காவில் விற்பனை செய்வதற்கான பிணையங்கள் தொடர்பிலான முன்வைப்பல்ல. இங்கே குறிப்பிடப்பட்ட பிணைகள் திருத்தப்பட்டவாறான, 1933ஆம் ஆண்டின் ஐக்கிய அமெரிக்கப் பிணையங்கள் சட்டம் '(பிணையங்கள் சட்டம்)" அல்லது ஐக்கிய அமெரிக்காவின் ஏதேனும் மாநில அரசின் பிணையங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டிருக்கவில்லை என்பதுடன் பதிவு செய்யப்படவும் மாட்டாதென்பதுடன் பதிவின்றி அல்லது ஏற்புடைத்தான விதிவிலக்கல்களின்றி அல்லது கொடுக்கல்வாங்கலொன்றிற்குட்படாது பிணையங்கள் சட்டம் மற்றும் ஐக்கிய அமெரிக்காவின் ஏற்புடைத்தான மாநில பிணையங்கள் சட்டத்தின் கீழ் ஐக்கிய அமெரிக்காவில் முன்வைக்கப்படவோ அல்லது விற்கப்படவோ முடியாது. ஐக்கிய அமெரிக்காவில் பிணையங்கள் தொடர்பில் ஏதேனும் பகிரங்க வழங்கல்களை மேற்கொள்ள வேண்டுமாயின் வழங்குநரிடமிருந்து பெறப்பட வேண்டிய முன்விபரணங்களின் மூலமே மேற்கொள்ளப்பட வேண்டுமென்பதுடன் அது வழங்குநர் பற்றிய விபரமான தகவல்களையும் கொண்டிருத்தல் வேண்டும். இப்பத்திரிகை வெளியீடு, சட்ட ரீதியற்றதாக இருக்கும் எந்தவொரு நியாயாதிக்கப் பகுதியிலும் அவற்றை வழங்குவதற்கோ அல்லது விற்பதற்கோ உரிய விதத்தில் விற்பதற்கான முன்வைப்பொன்றினையோ அல்லது பிணையங்களை வாங்குவதற்கானதொரு முன்வைப்பினையோ கொண்டிருக்கவில்லை. தரமிடலானது பிணையங்களை விற்பதற்கு, வாங்குவதற்கு அல்லது உடமையில் வைத்திருப்பதற்கானதொரு விதந்துரைப்பல்ல என்பதுடன் அது எந்தவொரு நேரத்திலும் தரமிடல் முகவரினால் இடைநிறுத்தப்படுவதற்கும் அல்லது குறைக்கப்படுவதற்கும் அல்லது புறக்கீடு செய்யப்படுவதற்கும் உட்பட்டதாகும்.