நவம்பரில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மெதுவடைதலானது விசேடமாக புடவைகள்இ அணியும் ஆடைகள்இ தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களின் தயாரிப்பு நடவடிக்கைகளின் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் ஏற்பட்ட மெதுவடைதலினால் பிரதானமாக உந்தப்பட்டது. எவ்வாறாகினும்இ உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைளின் புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியானது நத்தார் பருவகால கேள்வியுடன் மேம்பாடொன்றினை காண்பித்தன. தொழில்நிலையானது இக்காலப்பகுதியில் மாற்றமடையாது காணப்பட்டதுடன்இ இதற்கு விசேடமாக தளபாடங்கள் தயாரிப்பு நடவடிக்கைகளில் மேலதிகமாக தொழிலாளர்களை சேர்ப்பதில் காணப்பட்ட இடையூறுகள் காரணமாக அமைந்தன.
இவ்வேளையில், ஒட்டுமொத்த கொள்வனவுகளின் இருப்புகள் ஒரு மெதுவடைதலினை காண்பித்திருந்ததுடன், இதற்கு பிரதானமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அதனுடன் சார்ந்த உற்பத்தி பொருட்களில் காணப்பட்ட மட்டுப்படுத்தப்பட்ட உற்பத்திகள் காரணமாக அமைந்தன. நிரம்பலர் வழங்கல் நேரமானது ஒரு மெதுவான வீதத்தில் நீட்சியடைந்திருந்ததுடன், இதற்கு பிரதானமாக உணவு மற்றும் குடிபான தயாரிப்பு நடவடிக்கைகளில் கேள்வி மீதான அவர்களுடைய உற்பத்தியின் வேகத்தினை அதிகரிப்பதற்காக வழங்கலின் கிடைப்பனவு நேரத்தினை குறைவடைத்திருந்தமையினால் உந்தப்பட்டது.
தயாரிப்பு துறை கொ.மு.சுணின் அனைத்து துணைச்சுட்டெண்களும் நடுநிலையான 50.0 இற்கு மேலான பெறுமதியை பதிவு செய்து ஒத்தோபருடன் ஒப்பிடுகையில் நவம்பரில் ஒரு மெதுவான வீதத்தில் விரிவடைந்தமையினை சுட்டிக்காட்டியது.