இலங்கை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் (கொ.மு.சு) – 2020 மே

தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் 2020 மேயில் 49.3 சுட்டெண் புள்ளிகளினை அடைந்து ஒரு குறிப்பிடத்தக்களவு எழுச்சியினை பதிவு செய்ததுடன் இது 2020 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட அனைத்து காலத்திற்குமான தாழ்ந்த 24.2 சுட்டெண் புள்ளியிலிருந்து 25.1 சுட்டெண் புள்ளிகள் கொண்ட ஒரு அதிகரிப்பாகும். தயாரிப்பு துறையின் பொருளாதார நடவடிக்கைகளின் ஆரம்பத்திற்கு இடநகர்விற்கான தடைகளின் படிப்படியான இலகுபடுத்தல்கள் பங்களிப்புச் செய்தன. 

உற்பத்தித் துணைச் சுட்டெண்ணானது 2020 ஏப்பிறலில் பதிவுசெய்யப்பட்ட 3.5 சுட்டெண் பெறுமதியுடன் ஒப்பிடுகையில் 2020 மேயில் 51.1 சுட்டெண் பெறுமதியினை பதிவுசெய்ததுடன் உற்பத்தி செய்யப்பட்ட அளவுகளில் குறிப்பாக, உணவு, குடிபானங்கள் மற்றும் புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறைகளில் ஒரு குறிப்பிடத்தக்களவு விரிவாக்கத்தினைப் பிரதிபலித்தன. மேலும், புதிய கட்டளைகள், கொள்வனவுகளின் இருப்பு, தொழில்நிலை துணைச் சுட்டெண்களும் 2020 மே மாதகாலப்பகுதியில் மேம்பட்டிருந்தபோதிலும் நடுநிலையான மட்டத்திற்குக் குறைவாகவே இன்னும் காணப்படுகின்றது. இதேவேளையில், காலப்பகுதியில் நிரம்பலர் வழங்கல் நேரம் மெதுவான வீதத்தில் நீட்சியடைந்ததுடன் நிரம்பல் சங்கிலியின் மீதான அழுத்தங்களின் ஒரு மெதுவடைதலினை சமிஞ்சைப்படுத்துகின்றது.

முழு வடிவம்

Published Date: 

Tuesday, June 16, 2020