2019 யூனில் தயாரிப்பு நடவடிக்கைகள் 53.9 சுட்டெண் பெறுமதியொன்றினைப் பதிவுசெய்து உயர்வான வீதமொன்றில் விரிவடைந்தன. இது 2019 மேயுடன் ஒப்பிடுகையில் 3.2 சுட்டெண் புள்ளிகளைக் கொண்ட அதிகரிப்பாகும். தயாரிப்பு கொள்வனவு முகாமைத்துவச் சுட்டெண்ணின் இவ்விரிவாக்கத்திற்கு தொழில்நிலையில் விசேடமாக, உயிர்த்த ஞாயிறுத் தாக்குதலின் பின்னர் உணரப்பட்ட குறைந்த தொழில்நிலை கிடைக்கப்பெறும் நிலையிலிருந்து உணவு மற்றும் குடிபானம் மற்றும் புடவைகள் மற்றும் அணியும் ஆடைகள் துறையில் குறிப்பிடத்தக்க மீட்சி முக்கிய காரணமாக அமைந்திருந்தது. புதிய கட்டளைகள் மற்றும் உற்பத்தியில் குறிப்பாக, உணவு மற்றும் குடிபானங்கள் துறை தயாரிப்பில் விரிவுபடுத்தலும் 2019 யூனில் கொள்வனவு முகாமையாளர் சுட்டெண் மேம்படுவதற்கு பங்களித்திருந்தது. உயிர்த்த ஞாயிறுத் தாக்கத்தல்களினால் ஏற்பட்ட இடைத்தடங்கல்களுக்குப் பின்னர் பொருளாதார நடவடிக்கைகளின் சுமுகமடைதலுடன் புதிய கட்டளைகளும் உற்பத்தியும் யூனில் பாரியளவில் மீட்சியடைந்துள்ளன என அநேக பதிலிறுத்துநர்கள் எடுத்துக்காட்டியிருந்தனர்.
Monday, July 15, 2019