கட்டடவாக்கத்திற்கான இலங்கை கொள்வனவு முகாமையாளர்களின் சுட்டெண் (கொ.மு.சு - கட்டடவாக்கம்), 55.9 சுட்டெண் பெறுமதியினைப் பதிவுசெய்திருந்த மொத்த நடவடிக்கைச் சுட்டெண் மூலம் பிரதிபலிக்கப்பட்டவாறு மாச்சில் கட்டடவாக்க நடவடிக்கைகளில் விரிவடைதலை எடுத்துக்காட்டுகின்றது. நடுநிலையான அடிப்படை அளவிற்கு மேல் இச்சுட்டெண் காணப்படுகின்ற தொடர்ச்சியாக மூன்றாவது மாதமாக இது விளங்கி, கட்டடவாக்க நடவடிக்கைகளில் நிலையான மேம்படுதலைக் குறித்துக்காட்டுகின்றது.
புதிய கட்டளைகள், மாதத்திற்கு மாதம் அடிப்படையில் மெதுவான வேகத்தில் மாச்சில் அதிகரித்தன. விலைக்குறிப்பீடு சமர்ப்பிப்பதற்கு கருத்திட்டங்கள் கிடைக்கப்பெறுகின்றன இருந்தும், விலையிடலில் கடுமையான போட்டி நிலவுகின்றது என அநேகமான பதிலிறுப்பாளர்கள் குறிப்பிடுகின்றனர். அனுபவம்பெற்ற ஊழியர்களின் தொடர்ச்சியான புரள்வு மற்றும் எச்சரிக்கைமிக்க ஊழியர் ஆட்சேர்ப்பு என்பவற்றின் பின்னணியில் தொழில்நிலை தொடர்ந்தும் வீழ்ச்சியடைந்தது. செயற்பாட்டு மட்டங்களில் அதிகரிப்பிற்குச் சமாந்தரமாக கொள்வனவுகளின் அளவும் அதிகரித்தன. மேலும், சில வகையான கட்டடவாக்கப் பொருட்களின் விலை மட்டங்கள் மாதகாலப்பகுதியில் வீழ்ச்சியடைந்தன. அதேவேளை மாச்சில் நிரம்பலர் விநியோக நேரம் முன்னைய மாதத்தினைப் போன்று அதே வீதத்தில் நீட்சியடைந்தது.