''இலங்கையில் வியாபாரம் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்" வெளியீடு

'வியாபாரமொன்றினை ஆரம்பித்தல்', 'வியாபாரம் செய்கின்ற போது' மற்றும் 'ஏனைய நடவடிக்கைகள்' ஆகிய மூன்று பிரதான அத்தியாயங்களின் கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ள இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்படும் “இலங்கையில் வியாபாரம் செய்வதற்கான படிப்படியான வழிகாட்டல்" என்ற நூல் வர்த்தக சமூகம், வாய்ப்பு மிக்க தொழில்முயற்சியாளர்கள், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மற்றும் முதலீட்டு ஊக்குவிப்பு முகவராண்மைகள் போன்றவற்றுக்கு பயன்மிக்க தகவல்களை உள்ளடக்குகின்றது. ஒவ்வொரு தலைப்பின் கீழும் தொடர்புடைய நிறுவனங்கள், ஆவணத் தேவைப்பாடுகள், ஒழுங்குமுறைப்படுத்தல் இசைவுகள் மற்றும் இணையப்பெற்ற செலவுகள் தொடர்பான அனைத்தினையும் உள்ளடக்கிய தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனன. 2018 நடுப்பகுதிவரை தொடர்புடைய நிறுவனங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட அவசியமான திருத்தங்கள் இப்பதிப்பில் உள்ளடக்கப்பட்டுள்ளன.  

இவ் வெளியீட்டினை சென்றல் பொயின்ற் கட்டடத்திலுள்ள மத்திய வங்கியின் விற்பனை மற்றும் விநியோகக் கருமபீடத்திலும் (செதம் வீதி, கொழும்பு 01), வங்கித்தொழில் கற்கைகளுக்கான ஆய்வு நிலையம் (58, சிறி ஜயவர்த்தனபுர மாவத்தை, இராஜகிரிய) மற்றும் மத்திய வங்கியின் பிரதேச அலுவலகங்களிலும் (மாத்தறை, மாத்தளை, நுவரெலியா, கிளிநொச்சி, திருகோணமலை மற்றும் அநுராதபுரம்) கொள்வனவு செய்யலாம். இவ்வெளியீட்டின் இலத்திரனியல் பதிப்பினை இலங்கை மத்திய வங்கியின் உத்தியோகபூர்வ வெப்தளத்திலிருந்து (http://www.cbsl.gov.lk) தரவிறக்கம் செய்து கொள்ளமுடியும்.

 

முழுவடிவம்

Published Date: 

Wednesday, November 7, 2018