தயாரிப்புத் துறை கொள்வனவு முகாமையாளர் சுட்டெண், முன்னைய மாதத்தில் அவதானிக்கப்பட்ட 57.2 சுட்டெண் புள்ளிகளிலிருந்து 2018 ஓகத்தில் 58.2 சுட்டெண் புள்ளிகளுக்கு அதிகரித்திருந்தது. ஓகத்தில் தயாரிப்பு நடவடிக்கைகளில் அவதானிக்கப்பட்ட மேம்பாடானது விசேடமாக புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் தயாரிப்பு துறையில் புதிய கட்டளைகளில் ஏற்பட்ட அதிகரிப்பினால் வழிநடத்தப்பட்ட உற்பத்தியின் அதிகரிப்பினால் பிரதானமாக உந்தப்பட்டது. மேலும், தொழில்நிலையும் புதிய தொழிலாளர்களின் ஆட்சேர்ப்பினூடாக ஒரு உயர்வான வீதத்தில் அதிகரித்திருந்ததுடன், இதற்கு விசேடமாக உணவு மற்றும் குடிபான துறையினுள் நடவடிக்கைகளின் அதிகரிப்பிற்கான சாதகமான எதிர்பார்க்கையினால் வழிநடத்தப்பட்டிருந்தது. எவ்வாறாயினும், கொள்வனவுகளின் இருப்பு, ஒரு மெதுவடைதலை காண்பித்ததுடன் விசேடமாக ஏனைய உலோகமல்லாத கனிப்பொருள் உற்பத்திகளின் தயாரிப்பு நடவடிக்கைளில் உணரப்பட்டது. இருப்பினும், புடவைகள், அணியும் ஆடைகள், தோல் மற்றும் அது சார்ந்த உற்பத்திகளின் தயாரிப்பில் கொள்வனவுகளின் இருப்பு உணரப்பட்டது. அதேவேளை, நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரமானது வழக்கமாக பொருளாதாரத்தின் குறுகிய காலத்தில் நடவடிக்கைகளின் விரிவாக்கத்தின் துரித வளர்ச்சியை குறித்துக்காட்டுகின்றது. எவ்வாறாயினும், இச்சந்தர்ப்பத்தில், நீட்சியடைந்த நிரம்பலர் வழங்கல் நேரத்தில் ஏற்பட்ட மிதமடைதலானது கடந்த மாதத்தில் பிரதானமான இறக்குமதி நாடுகளில் காணப்பட்ட வழங்கல் இடையூறுகள் சாதாரண நிலைமையாகுதலின் காரணமாக அமைந்திருந்தது. ஆகையால், இது பொருளாதார நடவடிக்கைகளில் ஒரு விரிவாக்கத்தினை குறித்துக்காட்டவில்லை. ஒட்டுமொத்தமாக, கொள்வனவு முகாமையாளர் சுட்டெண்ணின் அனைத்து துணைச் சுட்டெண்களும் ஓகத்தில் விரிவடைந்தமையினைக் காண்பித்து நடுநிலையான 50.0 எல்லைக்கு மேலான பெறுமானங்களை பதிவு செய்தது. அதேவேளை, நடவடிக்கைகளுக்கான எதிர்பார்ப்பானது அடுத்த மூன்று மாதங்களுக்கான மேம்பாடொன்றினைக் குறித்துக்காட்டுகின்றது.