2021ஆம் ஆண்டில் கைச்சாதிடப்பட்ட இருதரப்பு நாணயப் பரஸ்பரப் பரிமாற்றல் உடன்படிக்கையை மூல உடன்படிக்கையில் குறித்துரைக்கப்பட்ட நியதிகள் மற்றும் நிபந்தனைகளுக்கிணங்க, இலங்கை மத்திய வங்கியும் சீன மக்கள் வங்கியும் 2024 திசெம்பரில் மேலும் மூன்று (03) ஆண்டு காலப்பகுதிக்கு வெற்றிகரமாகப் புதுப்பித்துக்கொண்டன. சீன யுவான் 10 பில்லியன் (ஏறத்தாழ ஐ.அ.டொலர் 1.4 பில்லியன்) கொண்ட நாணயப் பரஸ்பரப் பரிமாற்றல் வசதியானது சீனா மற்றும் இலங்கை நாடுகளுக்கிடையிலான நிதியியல் ஒத்துழைப்பினை எடுத்துக்காட்டுகின்றது.
இலங்கை மத்திய வங்கியின் சார்பில் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் முனைவர் பி. நந்தலால் வீரசிங்க, உடன்படிக்கையை கைச்சாத்திட்ட அதேவேளை சீன மக்கள் வங்கியின் சார்பில் சீன மக்கள் வங்கியின் ஆளுநர் திரு. பென் கொங்செங் கைச்சாத்திட்டார்.