இலங்கை மத்திய வங்கியின் பணிகள் (CBSL)
-
நாணயக் கொள்கையைத் தீர்மானித்தலும் நடைமுறைப்படுத்தலும்
-
செலாவணி வீதக் கொள்கையைத் தீர்மானித்தலும் நடைமுறைப்படுத்தலும்
-
இலங்கையின் அலுவலகமுறையான சர்வதேச ஒதுக்குகளின் சாதுரியமான மற்றும் பயனுள்ள முகாமையை வைத்திருத்தலும் முகாமைசெய்தலும்
-
இலங்கையின் நாணயத்தை வழங்குதலும் முகாமை செய்தலும்
-
கொடுப்பனவு முறைமைகளை நிருவகித்தலும், மேற;பார்வை செய்தலும், ஒழுங்குபடுத் துதலும் அத்தகைய கொடுப்பனவு முறைமைகளின் காப்பையும், பயனுறு தன்மையையும், வினைத்திறனையும் உறுதிப்படுத்துதலும்
-
நிதி நிறுவனங்களைப் பதிவுசெய்தலும், அவற்றுக்கு உரிமமளித்தலும், அவற்றை ஒழுங்குபடுத்துதலும், மேற்பார்வை செய்தலும்
-
மத்திய வங்கியினால் ஒழுங்குபடுத்தப்பட்டு மேற்பார்வை செய்யப்பட்ட நிதிநிறுவனங்களைத் தீர்மானித்தலும்
-
பேரண்ட முன்மதியுடைய கொள்கை வழிமுறைகளைக் கடைப்பிடித்தலும் நடைமுறைப்படுத்தலும்
-
புள்ளிவிபரங்களைச் சேகரித்தலும் காண்பித்தலும்
-
அரசாங்கத்துக்கான நிதிசார் மதியுரைஞராகவும் வங்கியாளராகவும் செயலாற்றுதலும்
-
ஏதேனும் எழுத்திலான சட்டத்தினால் அல்லது சட்டத்தின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட அளவிற்கு அரசாங்கத்தின் முகவராகச் செயலாற்றுதல்
-
அதன் கொள்கைகளும் தொழிற்பாடுகளும் பற்றிப் பாராளுமன்றத்துக்கும், அரசாங்கத்துக்கும், பொதுமக்களுக்கும் தெரிவித்தலும்
-
பகிரங்கச் சர்வதேச நிதிநிறுவனங்களுட்பட்ட சர்வதேச ஒழுங்கமைப்புகளுடன் ஒத்துழைத்தலும் அவற்றில் பங்குபற்றுதலும் மற்றும் அதன் குறிக்கோள்களுடன் தொடர்புபட்ட கருமங்கள் சம்பந்தமாக உள்நாட்டு மற்றும் வெளிநாட்டுப் பகிரங்க நிறுவனங்களுடன் ஒத்துழைத்தலும்
-
இலங்கையில் நிதிசார் உட்சேர்க்கையை மேம்படுத்தலும்
-
நிதிசார் முறைமையின் நிதியுறுதியை உறுதிப்படுத்தும் வழிவகையாக வைப்புக் காப்புறுதியையும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டங்களையும் தாபித்தலும்