இலங்கை நாணயத்தின் வரலாறு
இலங்கை நீண்ட வரலாற்றையும் அதேபோன்று நீண்டதும் செல்வம் மிகுந்த பொருளாதார வரலாற்றையும் கொண்டதொரு நாடாகும். அத்தகைய வரலாற்றினைக் கற்பது பொருளியலாளாகளுக்கு மட்டுமன்றி சமூகத்திலுள்ள ஒவ்வொருவருக்கும் நன்மையளிப்பதாக அமையும் என்பதில் ஐயமில்லை. நாட்டின் வெவ்வேற காலப்பகுதியில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள் அந்நாட்டின் வரலாற்றினைக் கற்கும் பொழுது முக்கிய பங்கினை ஆற்றுகின்றன. அளவில் சிறிதாக இருந்தபோதும் அதன் அற்பசொற்ப விடயங்களினூடாக நாணயங்கள் அவை பயன்படுத்தப்பட்ட நாட்டின் பொருளாதாரம் மற்றும் கலாச்சார வரலாறு பற்றிய பெறுமதிமிக்க தகவல்களை வழங்கக்கூடியதாக இருக்கிறன.
தொலமியின் உலக வரைபடத்தில் இலங்கை பெரிதாக உள்ளது ஏன்?
தொலமியின் தேசப்படத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்டது |
கி.பி. 150ஆம் ஆண்டளவில் உரோமில் வசித்த தொலமியினால் வரையப்பட்ட உலக வரைபடமே இங்கு காணப்படுகின்றது. அவர் அதனை மிகவும் சரியான நெடுங்கோடு மற்றும் அகலக்கோடுகளுக்கடையிலான இணைப்புக்களை கொண்டதாக வரைந்துள்ளார். எனினும் மத்தியதரைப் பிரதேசத்தையும், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கையும் மிகச் சிறந்த விதத்தில் காட்டியுள்ள தொலமியின் வரைபடத்தில் இலங்கை மிகப் பெரிதாகக் காட்டப்பட்டுள்ளது. ஆயினும் அது தற்செயலானதொன்றல்ல. அவர் வாழ்ந்த காலத்திற்கு முன்னர் இருந்தே உலக மக்களிடையே இலங்கை தொடர்பில் காணப்பட்ட வரவேற்பே அதன் மூலம் எடுத்துக்காட்டப்படுகின்றது. நீளத்திலும் அகலத்திலும் சிறியதாக இருந்த போதிலும் முழு உலத்திலும் அதற்கு பெரும் மதிப்பும் வரவேற்பும் காணப்பட்டது. பண்டைய காலத்தில் எமது நாடு உலக மக்களின் கவனத்தை ஈர்ப்பதற்கு ஒரு காரணமாயிருந்தது யாதெனில், இது தூர கிழக்கிலிருந்து மேற்கு வரை வியாபித்திருந்த கடல் பட்டுப்பாதையின் மத்தியில் அமைந்திருந்தமையேயாகும். அதேபோன்று அது தரைவழிப் பட்டுப்பாதைக்குள் பிரவேசிக்கின்ற ஒரு நுழைவாயிலாகவும் காணப்பட்டது. மேற்கிலிருந்தும் கிழக்கிலிருந்தும் வருகை தந்த வணிகர்கள் மற்றும் நாடுகளைக் கண்டறியும் பயணிகள் இந்நிலப் பரப்பிலேயே சந்தித்துக்கொண்டனர். இலங்கை அவர்களுக்கான வர்த்தக மத்திய நிலையமொன்றாகக் காணப்பட்டது. இது பற்றிய அநேகமான தகவல்கள் கிரேக்க, உரோம மற்றும் சீன எழுத்தாளர்களால் குறிப்பிடப்பட்டுள்ளன. இந்த விடயங்கள் இலங்கையின் பொருளாதார வரலாற்றை வெளிப்படுத்துகின்றன. பாரிய நீர்ப்பாசனத் திட்டங்களை நெருக்கமாகப் பரிசோதிக்கும் பொழுது அக்காலகட்டத்தில் இலங்கையில் பொறியியல் கலையும் வேளாண்மையும் மிகவும் அபிவிருத்தியடைந்த மட்டத்தில் காணப்பட்டதென்பது தெளிவாகின்றது. அதுமட்டுமன்றி அதற்கு சமாந்திரமாக இலங்கையில் அபிவிருத்தியடைந்த வியாபார முறையொன்றும் நடைமுறையில் இருந்தது. |
இம்முயற்சிகள் பற்றிய விபரமான தகவல்களை கல்வெட்டுக்கள், வம்சக்கதைகள், (நீண்டகால ராஜபரம்பரைகள்) பண்டைய கடித ஆவணங்கள் மற்றும் ஏனைய தொல்பொருளியல் சான்றுகளின் ஊடாகப் பெறலாம். இச் சான்றுகளில் நாணயங்கள் மற்றும் கல் வெட்டுக்களுக்கு சிறப்பானதொரு இடம் காணப்படுகின்றது. பண்டையகால இலங்கையின் பொருளாதார வரலாறு பற்றி இனங்காணக்கூடிய உள்நாட்டு மூலாதாரங்களான பெருந்தொகை நாணயங்கள் மற்றும் கல் வெட்டுக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் பரவிக் காணப்படுகின்றன. உள்நாட்டு மூலாதாரங்களுக்கு மேலதிகமாக சர்வதேச வர்த்தகர்கள் மற்றும் வெளிநாட்டவர்களின் அறிக்கைகளின் மூலமும் பண்டையகால இலங்கையின் கடந்தகால வர்த்தகப் பொறிமுறை பற்றிய விடயங்கள் வெளிக்கொணரப்படுகின்றன. இலங்கையின் பொருளாதார வரலாறு பற்றிய காலங்களைக் கட்டியெழுப்பும் முயற்சியில் இத்தகவல்கள் அதிகளவு அனுகூலங்களை வழங்குகின்றன. இவற்றின் மூலம் அளப்பரிய உதவி கிடைக்கின்றது.
இலங்கையின் நாணயப் பயன்பாட்டினை பின்வரும் காலப்பகுதிகளாகப் பிரிக்கமுடியும்.
- அனுராதபுர யுகம்
- பொலநறுவை தொடக்கம் கோட்டை வரையான யுகம்
- கண்டி யுகம்
- காலணித்துவ யுகம்
- இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதிலிருந்து சுதந்திரத்திற்குப் பின்னரான காலம்
அனுராதபுர யுகம்
அனுராதபுர காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள்கஹபான சுவாஸ்திக நாணயக்குத்தி பிடரிமயிர் இல்லாத சிங்க நாணயக் குத்திகள் லக்ஷ்மி பளிங்குக்கல் கஹவானு அல்லது லங்கேஸ்வரர் நாணயக்குத்தி வெளிநாட்டு நாணயக்குத்தி |
அனுராதபுர இராசதானி (கி.மு. 377 - 1017)அதன் தலைநகரத்தின் பெயரினால் அழைக்கப்படும் அனுராதபுர இராசதானி பண்டய இலங்கையில் நிறுவப்பட்ட முதலாவது இராசதானியாக விளங்கியது. கி.மு 377இல் மன்னன் பண்டுகாபயவினால் நிறுவப்பட்ட இந்த இராசதானி காலத்திற்குக் காலம் ஆங்காங்கே சுதந்திரமான ஆட்சிகள் தோன்றினாலும் கூட நாடுமுழுவதும் அதன் அதிகாரம் பரவிக் காணப்பட்டது. அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகள் மற்றும் நாணயப் பயன்பாடு பற்றிய அநேகமான தகவல்கள் கல்வெட்டுக்கள் மூலம் வெளிப்படுத்தப்படுகின்றன. அக்காலத்தில் நாணயத் தயாரிப்பு மற்றும் விநியோகம் மிகவும் முறைசார்ந்த அடிப்படையில் நடைபெற்றுள்ளதென்பது இதன் மூலம் தெளிவாகின்றது. நாணயத் தயாரிப்புக்குப் பொறுப்பான பணிப்பாளர் அக்காலத்தில் "ரூபடக" என அழைக்கப்பட்டுள்ளார் (பெரியகடு விஹாரை கல்வெட்டு). அதேபோன்று தயாரிக்கப்பட்ட நாணயங்களை அங்கீகரிப்பவர் "ரூபவார" என்ற பெயரில் அழைக்கப்பட்டுள்ளார் (கதுறுவெவ கல்வெட்டு). |
மூலம்: இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் |
கஹபான
கஹபான |
மிகப் பழைய நாணயக் கூறு என இத்தீவில் அறியப்பட்டது கஹபான ஆகும். இவை சமஸ்கிருதத்தில் புராண எனவும் ஆங்கிலத்தில் எல்டிங்கஸ் எனவும் அழைக்கப்பட்டன. இவை பொதுவாக துளை அடையாளமிடப்பட்ட குத்திகள் என அறியப்பட்டன. குத்தியின் ஒரு பக்கத்திலோ அல்லது இரு பக்கங்களிலோ ஓர் அடையாளக் குறி குத்தப்பட்டுள்ளது. கஹபான பண்படுத்தப்பட்ட உலோகத் தகட்டில் கீறுகள் ஏற்படுத்தப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டதென நம்பப்படுகின்றது. அறியப்பட்ட அத்தகைய குத்திகள் வட்டம், சதுரம், செவ்வகம். நீண்ட செவ்வகம் போல பல வடிவங்களை உடையது. அவற்றின் நிறை மூலைகளில் வெட்டப்படுவதன் மூலம் சரி செய்யப்பட்டுள்ளன. கஹபானவின் லோகம் பெருமளவுக்கு வெள்ளியாகவே இருந்தது.
|
இதற்கமைய, அரசினால் அங்கீகரிக்கப்பட்ட நாணயங்களில் அரச முத்திரை பதிக்கப்பட்டிருந்தது. இந்த நாணயங்கள் ஒருவரிடமிருந்து இன்னொருவருக்கு கைமாறும் போது பல்வேறு வகையான தனித்துவமான அடையாளங்கள் நாணயத்தின் மீது குறிக்கப்பட்டன. இதனால், இந்நாணயங்கள் ஒன்றிலிருந்து ஒன்று வேறுபட்ட பல அடையாளங்களைக் கொண்டிருக்கின்றன. அத்தகைய ஒரு நாணயத்தில் ஏறக்குறைய 20 அடையாளங்கள் இடப்பட்டுள்ளன. சூரியன், சந்திரன், யானை, நாய், மரம் ஆகியன அத்தகைய அடையாளங்களில் சிலவாகும். இத்தகைய 500 க்கும் மேற்பட்ட குறியீடுகள் ஷகஹபன| நாணயத்தின் மீது இடப்பட்டுள்ளதென்பது இனங்காணப்பட்டுள்ளது. ஆயினும் இந்த நாணயங்கள் இந்நாட்டில் தயாரிக்கப்பட்டவையல்ல இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நாணயங்களாகும் என்றே நம்பப்படுகின்றது. இவை சர்வதேச வர்த்தகத்தின் ஊடாக இந்திய வணிகர்களின் மூலம் இந்நாட்டிற்குக் கிடைத்துள்ளன. இந்த நாணயங்களைப் பின்பற்றியே இந்நாட்டில் 'கஹபன' தயாரிக்கப்பட்டுள்ளன.
கி.மு. 3 வது நூற்றாண்டிலிருந்து கி.பி. 1வது நூற்றாண்டு வரை 'கஹபன'நாணயங்கள் எமது நாட்டில் பயன்பாட்டில் இருந்துள்ளன. அநுராதபுரம், தொலுவில, வெஸ்ஸகிரியா, சீகிரியா, புன்னாபொல, தெதிகம, மினுவன்கொடை, உடவளவை, அம்பலாங்கொடை, திஸ்ஸமகாராமய, வல்லிபுரம், கந்தரோடை, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாந்தோட்டம், பதவியா, திருகோணமலை ஆகிய பல பிரதேசங்களிலிருந்து இந்த வகையைச் சேர்ந்த நாணயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
சுவாஸ்திக நாணயக்குத்திகள்மேலே விபரிக்கப்பட்டுள்ள, பல அடையாளங்களைக் கொண்ட 'கஹபன' நாணய வகைகளுக்கு மேலதிகமாக அநுராதபுர காலகட்டத்தில் மேலும் பல நாணயங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. யானை மற்றும் ஸ்வஸ்திக்க அடையாளமிடப்பட்ட நாணயங்கள் அவற்றில் ஒரு வகையாகும். அது சிறிய செப்புக் காசாகும். இந்த நாணயங்களை தயாரிக்கின்றபோது 'கஹபன' நாணயத்தில் காலத்திற்குக் காலம் குறிக்கப்பட்டிருந்த அடையாளங்களில் ஒருசிலவற்றைத் தெரிவு செய்து இலச்சினையொன்றுக்கு எடுத்து அச்சிடுதல் நடைபெற்றுள்ளதென்பதை காணக்கூடியதாக உள்ளது. |
யானை மற்றும் ஸ்வாதிக்க நாணயம் |
அரச மரம் மற்றும் ஸ்வாதிக்க நாணயம் |
அரச மரம் மற்றும் ஸ்வாதிக்க நாணயம் |
நாணயத்தின் ஒரு பக்கத்தில் நடக்கும் யானையொன்றின் உருவத்தையும், அரை பிறை அடையாளங்கள் மூன்றின் மூலம் தயாரிக்கப்பட்ட தாது கோபுரமொன்றையும், ஸ்வஸ்திகவையும், சதுரக் கோட்டுடன் கூடிய மூன்று கிளைகளைக் கொண்ட அரச மரமொன்றையும் காணக்கூடியதாக உள்ளது. மறு பக்கத்தில் ஸ்வஸ்திகவும், திரிசூலத்தின் அடையாளமொன்றும் தாது கோபுரத்தின் அடையாளமொன்றும் உள்ளடங்கியுள்ளது. எவ்வாறாயினும் நாணய அலகொன்றாக நோக்குகின்றபோது இந்த நாணயமும் 'கஹபன' வகையைச் சேர்ந்த நாணயமொன்றாக இருக்கலாம்.
பிடரிமயிர் இல்லாத சிங்கக் நாணயக்குத்திகள்பிடரிமயிர் இல்லாத சிங்கக் நாணயக்குத்திகள் |
இந்த நாணயம் செப்பு உலோகத்திலிருந்தே தயாரிக்கப்பட்டுள்ளது. நாணயத்தின் ஒரு பக்கத்தில் சிங்க உருவம் காணப்படுகின்றது. மறு பக்கத்தில் சிறிய மூன்று அல்லது நான்கு புள்ளிகள் காணப்படுகின்றன. மேற்படி புள்ளிகளின் மூலம் நாணயத்தின் பெறுமதி காட்டப்பட்டுள்ளதென கருதலாம். இந்த நாணயத்தின் விட்டம் ½ - ¾ அங்குலங்களுக்கிடையில் காணப்படுவதோடு நிறை அண்ணளவாக 15 - 40 கிறேன்ஸ் ஆகும். இந்நாணயம் கி.பி. 3 - 4 ஆம் நூற்றாண்டுகளிலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது. அநுராதபுரம் அகழ்வுகளின்போதும் வட பிராந்திய அகழ்வுகளின் போதும் இந்த வகையைச் சேர்ந்த நாணயங்களைக் கண்டெடுக்கப்பட்டுள்ளன. |
லக்ஷ்மி பளிங்குக்கல்கி.மு. 3 - கி.பி. 8 வது நூற்றாண்டு போன்றதொரு மிகப் பண்டைய காலத்திலேயே பெண்ணின் உருவத்துடன் கூடிய நாணயங்கள் முதற் தடவையாக இலங்கையில் சுற்றோட்டத்தில் காணப்பட்டன. நாணயங்களின் முகப்பில் காணப்படுகின்ற பெண் இலட்சுமியென்றே கருதப்படுகின்றது. ஆதலால் இந்நாணயங்கள் இலட்சுமி தகடு நாணயம் என அழைக்கப்படுகின்றன. இந்த நாணயங்கள் இரண்டு விதத்தில் தயாரிக்கப்பட்டுள்ளதைக் காணலாம். அது வார்க்கப்பட்டதாகவும் மற்றும் செப்புத் தகட்டில் அச்சிடப்பட்ட விதத்திலுமாகும். நாணயம் பல்வேறு அளவுகளைக் கொண்டதாக காணப்படுகின்றது. இதற்கமைய வார்க்கப்பட்ட வகையைச் சேர்ந்த நாணயத்தின் நீளம் 1¼ அங்குலமாகவும் அகலம் ½ அங்குலமாகவும் காணப்படுகின்றது. நாணய தயாரிப்பின்போது அண்ணளவாக 60 சதவீதம் ஈயமும் 15 சதவீதம் செப்பும் கலக்கப்பட்டுள்ளது. |
லக்ஷ்மி பளிங்குக்கல் |
தாமரை மலர் மீது நிற்கும் இலட்சுமி, மலரின் இரு புறத்திலிருந்தும் எழுகின்ற இரண்டு தாமரைத் தண்டுகளை கைகளால் பிடித்துள்ள விதமும், தோள் வரை எழுந்துள்ள அந்த தாமரைத் தண்டுகளில் பூத்துள்ள இரண்டு தாமரை மலர்களின் மீது தும்பிக்கைகளால் தண்ணீர் குடமொன்று வீதம் ஏந்தியுள்ள இரண்டு யானைகள் அவளை தண்ணீரால் நீராட்டுகின்ற விதமும் காட்டப்பட்டுள்ளது. இந்த வகையைச் சேர்ந்த சில நாணயங்களில் இலட்சுமி தாமரை மலரின் மீது அமர்ந்துள்ள விதமே காணப்படுகின்றது.
அநுராதபுரம் யாழ்ப்பாணத்தின் வல்லிபுரம், திருக்கேதீஸ்வரம், கந்தரோடை, மன்னார், முல்லைத்தீவு, சிலாபம், திஸ்ஸமகாராமய ஆகிய பல்வேறு பிரதேசங்களிலிருந்து மேற்படி இலட்சுமி தகடு நாணயத்தைக் கண்டெடுக்கக்கூடியதாக இருந்துள்ளது.
கஹவானு அல்லது லங்கேஸ்வரா நாணயக்குத்திகள்சிங்களவர்களின் தங்க நாணயம் 'ஹகவனு' என அறியப்பட்டதுடன் இது கி.பி 7ஆம் நூற்றாண்டிலிருந்து 8ஆம் நூற்றாண்டு வரை இத்தீவில் சுற்றோட்டத்திலிருந்தது. இவை தங்க உலோகத்தினாலும் தங்க முலாம் பூசப்பட்டும் தயாரிக்கப்பட்டிருந்ததோடு, பெறுமதிக்கு ஏற்ப 'கஹவனு', 'அட் கஹவனு', 'தெஅக' மற்றும் 'அக' என்றவாறு பயன்படுத்தப்பட்டுள்ளன. நாணயத்தின் முகப்பில் தாமரைத் தண்டொன்றில் நிற்கின்ற ஒரு உருவம் காணப்படுகின்றது. அந்த உருவம் 'தோதிய' போன்றதொரு ஆடையை அணிந்துள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. மேற்புறம் நோக்கியதாயுள்ள இடது கையினால் முகத்தின் பக்கம் ஒரு பொருளைச் சாய்த்துப் பிடித்துள்ளதைக் காணலாம். சிலர், நாணயத்தின் முகப்புப் பகுதியில் செல்வத்திற்கு அதிபதியாகக் கருதப்படுகின்ற குபேரனின் உருவமும் மறுபக்கத்தில் சங்கு மற்றும் தாமரையின் உருவமும் குறிக்கப்பட்டுள்ளதாக கருத்துத் தெரிவிக்கின்றனர். இது தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன. எவ்வாறாயினும், கஹவனுவின் முகப்பிலும் பின்புறத்திலும் உள்ள உருவங்களின் இடது கையினால் பிடித்துள்ள பொருளின்படி அந்த நாணயங்களை சில வகைகளாகப் பிரித்துக் காட்ட முடியும்.சூரியன் மற்றும் சந்திரன்,கிண்ணம்,தாமரை மற்றும் பிறை,பிறை மற்றும் பிறை,மல்லிகை மொட்டு மற்றும் தாமரை,உருண்டை மற்றும் வளையம்,மல்லிகை மற்றும் சங்கு என்றவாறாகும். |
கஹவானு |
அனுராதபுத்திற்குரிய வெளிநாட்டு நாணயக்குத்திகள்பண்டைய கால இலங்கை கப்பல்துறை மத்திய நிலையமாகப் பெற்றிருந்த இடத்தைப் பற்றி அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட வெளிநாட்டு நாணயங்கள் சான்றுபகர்கின்றன. இவ்வாறு சர்வதேச வர்த்தகத்தின்போது கொடுக்கல் வாங்கலுக்காகப் பயன்படுத்தப்பட்ட கிரேக்க, உரோம, சீன, அரேபிய மற்றும் இந்திய நாணயங்கள் பலவும் அநுராதபுரம், மிகிந்தலை, சீகிரியா, குருணாகல், மாத்தறை, அகுருகொட மற்றும் பதுளை ஆகிய பிரதேசங்களிலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. |
இந்திய கிரேக்க நாணயம் |
||
பல்லவர் நாணயம் |
சசானியன் சபூர் நாணயம் |
குசான் நாணயம் |
உரோம நாணயங்கள் செப்பினால் செய்யப்பட்ட பல உரோம நாணய வகைகள் இலங்கையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. அந்த நாணயங்கள் உரோமிலேயே வார்க்கப்பட்டுள்ளன. நாட்டின் பல பாகங்களிலிருந்தும் இத்தகைய நாணயங்களைக் கண்டெடுக்க இயலுமாயிருந்ததன் மூலம், அத்தகைய நாணயங்கள் இந்நாட்டில் பெருமளவில் பயன்படுத்தப்பட்டுள்ளமை தெளிவாகின்றது. நாணயங்களில் பெரும் பகுதி கி.பி. 4-5 ஆம் நூற்றாண்டுகளுக்குரியவையாக இருக்கின்றன. அக்காலத்தில் உரோம பேரரசுக்கும் எமது நாட்டுக்கும் மத்தியில் பெருமளவு வர்த்தக நடவடிக்கைகள் நடைபெற்றுள்ளமை இதன் மூலம் தெளிவாகின்றது. அதேபோன்று இந்த நாணயங்கள் அதிகளவில் பயன்படுத்தப்பட்டுள்ளதால் தேய்வடைந்துள்ள இயல்பைக் காணக்கூடியதாக உள்ளது. |
உரோமன் நாணயம் - 1 |
உரோமன் நாணயம் - 2 |
||
சர்வதேச வர்த்தகத்தின் மூலம் கிடைத்த உரோம நாணயங்களுக்கு மேலதிகமாக எமது நாட்டிலும் உரோம நாணயங்கள் வார்க்கப்பட்டுள்ளமையைக் காணக்கூடியதாக உள்ளது. அத்தகைய பெருந்தொகையான நாணயங்கள் மாத்தறை நாவிமன பிரதேசத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டுள்ளன. சிகிரியா மற்றும் அநுராதபுரம் அகழ்வுகளின் மூலம் இந்த இரண்டு வகைகளுக்குமுரிய அதாவது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட உரோம நாணயங்கள் மற்றும் உரோமப் பேரரசில் தயாரிக்கப்பட்ட உரோம நாணயங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. இந்த இரண்டு வகை நாணயங்களுக்குமிடையே காணக்கூடியதாயுள்ள பிரதானமான வேறுபாடு யாதெனில், உரோமத்தில் தயாரிக்கப்பட்ட நாணயங்களில் காணப்படுகின்ற ஆங்கில எழுத்து உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட நாணயங்களில் காணப்படாமையேயாகும். அதற்குப் பதிலாக பல்வேறு வடிவங்களிலான சிறிய கோடுகள் நாணயங்களில் சேர்க்கப்பட்டுள்ளதைக் காணக்கூடியதாக உள்ளது. |
||||
சீன நாணயங்கள் இந்த நாணயங்கள் செப்பு மற்றும் அதிகளவு செப்புக் கலக்கப்பட்ட உலோகங்களால் தயாரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு காலகட்டத்திலும் தயாரிக்கப்பட்ட நாணயங்கள் பல்வேறு அளவுகளைக் கொண்டுள்ளன. வட்ட வடிவிலான இந்நாணயங்களின் மத்தியில் சதுரக் கட்டமொன்று துளையாக அமைக்கப்பட்டிருக்கும். அதன் நான்கு பக்கங்களிலும் சீன வரைகோட்டு எழுத்துக்களால் சீனப் பேரரசரின் பெயர் குறிப்பிடப்பட்டிருப்பதைக் காணலாம். நாணயத்தின் மறுபுறம் எந்தவொரு வரைபடமோ எழுத்தோ காண்பதற்கு இருக்காது. |
சீன நாணயம் - 1 |
சீன நாணயம் - 2 |
அரேபிய நாணயங்கள்
இந்த நாணயங்கள் செப்பு, வெள்ளி ஆகிய உலோகங்களின் மூலமே தயாரிக்கப்பட்டுள்ளன. நாணயங்களின் முகப்பில் அரேபிய மொழியில் பக்தி வாசகர்கள் குறிக்கப்பட்டுள்ளன. நாணயத்தின் மறுபுறம் அவை வெளியிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலநறுவை தொடக்கம் கோட்டை இராச்சியம் வரை
பொலநறுவை தொடக்கம் கோட்டை இராச்சியம் வரை பயன்படுத்தப்பட்ட குத்திகள்மேசா குத்திகள் தம்பதெனிய இராச்சியக் குத்திகள்/ மத்திய கால நாணயங்கள் சிங்க நாணயங்கள் சேது நாணயங்கள் |
பொலநறுவை இராசதானி (1017 - 1070)பொலநறுவையிலிருந்து கோட்டே வரையான இராசதானி 1017 - 1070, 1070 - 1232 தம்பதெனியா 1232 - 1272, யாப்பகூவ 1272 - 1293, குருநாகல் 1293 - 1340, கம்பளை 1341 - 1374 மற்றும் கோட்டே (சீதாவாக்க 1521 - 1593) 1372 - 1597. கி.பி 1017 - 1070 காலத்தில் இலங்கையின் "வட பகுதியை" ஆட்சிபுரிந்த சோழ மன்னர்களும், அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் இறுதிப் பகுதியில் வெளியிடப்பட்ட "கஹவனுவுக்கு" சமமான கஹவனுவை வெளியிட்டுள்ளனர். ஆயினும் அது சொரசொரப்பான விளிம்புகளைக் கொண்டிருந்தது. தயாரிப்பின் பொருட்டு செப்பு பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்நாணயங்கள் இவற்றை வெளியிட்ட நேரம் ஆட்சியிலிருந்த மன்ன்னின் பெயரைக் கொண்டிருந்தமை இதில் காணப்பட்ட விசேட அடையாளமாகும். ஆட்சியாளரின் பெயருடன் நாட்டில் வெளியிடப்பட்ட முதலாவது நாணயம் இதுவாகும்.
|
மூலம்: இலங்கை சுற்றுலா ஊக்குவிப்புப் பணியகம் |
நாணயங்களிலுள்ள அரசர்கள் பெயர்கள்:
|
மேசா குத்தி - 1 |
மேசா குத்தி - 2 |
மேசா குத்தி - 3 |
|||||||||||
மோசா குத்திகள் சோழர்களின் ஆதிக்கத்தை முறியடித்து நாட்டை ஒரு கொடியின் கீழ் கொண்டுவந்ததுடன் பொலனறுவை இராசதானியை ஆரம்பித்து வைத்த முதலாவது விஜயபாகு மன்னரும் 'கஹவனுக்களை' வெளியிட்டுள்ளார். அவர் நாணயங்களை தயாரிக்;கின்றபோது அவற்றின் மேல் தமது பெரையும் பொறித்தார். இதன்படி நாணயங்களில் தமது பெயரைப் பொறித்து அவற்றை வெளியிட்ட முதலாவது சிங்கள மன்னர் முதலாவது விஜயபாகு மன்னராவார். அந்த நாணயம் 'மஸ்ஸ' என அழைக்கப்பட்டது. பொலனறுவைக் காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து தம்பதெனிய காலகட்டத்தின் இறுதி வரையிலும் மன்னரின் பெயரைப் பொறித்து நாணயங்களை வெளியிடுகின்ற இந்த நடைமுறை செயற்பட்டு வந்தது. பொலனறுவை இராசதானி காலப்பகுதிக்குரிய நாணயங்கள், அவற்றின் தயாரிப்புக்குப் பொறுப்பான மன்னரின் பெயர் 'நாகரி' எழுத்துக்களில் அல்லது 'நாகரி' உருக்களில் பொறிக்கப்பட்டுள்ளன. இதன்படி, விஜயபாகு மன்னனின் பெயர் ஸ்ரீ விஜயபாகு எனவும், பராக்கிரமபாகு மன்னின் பெயர் ஸ்ரீ பராக்கிரமபாகு எனவும், வோடகங்க என்பது ஸ்ரீ வோடகங்கதேவ எனவும், லீலாவதீ இராணி என்பது ஸ்ரீ ராஜ லீலாவதீ எனவும், சஹஸ்ஸமல்ல மன்னன் என்பது ஸ்ரீ சஹஸ்ஸமல்ல எனவும், தர்மாசோக என்பது ஸ்ரீ தர்மாசோகதேவ எனவும், புவனேகபாகு என்பது ஸ்ரீ புவனேகபாகு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஆயினும் நிஷங்கமல்ல மன்னரின் பெயர் ஸ்ரீ கலிகலகேஜ என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. விஜயபாகு மற்றும் பராக்கிரமபாகு மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களில் அவர்களது பெயர்களைப் பொறிக்கின்றபோது அவை எத்தனையாவது விஜயபாகு மன்னருடைய காலத்தில் அல்லது எத்தனையாவது பராக்கிரமபாகு மன்னருடைய காலத்தில் வெளியிடப்பட்டதென்பது குறிப்பிடப்படவில்லை. நாகரீ எழுத்துக்களில் பெயர் மாத்திரம் ஒரே விதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று லீலாவதீ இராணியும் மூன்று காலகட்டங்களில் ஆட்சி புரிந்துள்ள போதிலும் அவரால் வெளியிடப்பட்ட நாணயங்களும் மேற்படி காலகட்டங்களில் எந்தக் காலத்தில் வெளியிடப்பட்டதென்பதை இனங்காண்பதற்கு முடியாதுள்ளது. பொலனறுவை இராசதானிக் காலத்தில் சோழ மன்னர்களின் முதலாவது ராஜராஜன் (கி.பி. 985 - 1016), முதலாவது ராஜேந்திரன் (கி.பி. 1012 - 1044) மற்றும் முதலாவது ராஜாதிராஜா (கி.பி. 1018 - 1054) ஆகியோரால் வெளியிடப்பட்ட நாணங்களும் பாண்டிய மன்னர்களால் வெளியிடப்பட்ட நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றிற்கு மேலதிகமாக, சீனாவின் சுங் வம்சத்தின் மன்னர்களது நாணயங்களும் அரேபிய நாணயங்களும் பயன்படுத்தப்பட்டுள்ளமை மூலம் அநுராதபுர இராசதானி காலகட்டத்தைப் போன்றே பொலனறுவை இராசதானி காலகட்டத்திலும் இலங்கை சர்வதேச வர்த்தகத்தில் ஈடுபட்டிருந்தமை தெளிவாகின்றது. |
தம்பதெனிய குத்திகள்/ மத்திய கால நாணயங்கள்நாணயங்களிலுள்ள அரசர்கள் பெயர்கள்:
|
சிங்கக் குத்திகள் - பராக்கிரமபாகு IV |
அநுராதபுர இராசதானிக் காலகட்டத்தின் இறுதிக் காலத்தின் தயாரிப்பொன்றாகக் கருதப்படுகின்ற தங்க 'கஹவனு' பொலனறுவை காலகட்டத்தில் பிரவேசிக்கின்றபோது செப்பு நாணயமாக மாறியது. எவ்வாறாயினும், பொலனறுவை காலகட்டத்தின் ஆரம்பத்திலிருந்து தம்பதெனியா காலகட்டம் வரை பயன்படுத்தப்பட்ட நாணயங்கள் மத்திய கால நாணயங்களாக (தம்பதெனியா) அழைக்கப்படுகின்றன. 'தம்பதெனிய மஸ்ஸ' எனக் குறிப்பிடப்படுவது பொலனறுவை இராசதானி காலகட்டத்தில் வெளியிடப்பட்ட மஸ்ஸ நாணயத்தைப் போன்றதாகும். 'சிங்கள மஸ்ஸ' எனக் குறிப்பிடப்படுவதும் இதே நாணயமாகும். |
||||||||
இந்த நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவப் படங்கள் அநேகமாக அநுராதபுர காலகட்டத்தில் வெளியிடப்பட்ட நாணயங்களில் உள்ளடங்கியுள்ள உருவங்களுக்கு பெரும்பாலும் ஒத்தவையாகக் காணப்படுகின்றன. நாணயத்தின் ஒரு பக்கத்தில் 'தோதியைப்' போன்றதொரு ஆடை அணிந்த மனிதன் வலதுபுறம் நோக்கியவாறு உள்ள விதத்தில் உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளது. செப்பினால் தயாரிக்கப்பட்ட 'மஸ்ஸ' நாணயத்திலும் அதே உருவத்தைக் காணக்கூடியதாக உள்ளது. நாணயத்தின் மறுபக்கத்தில் அமர்ந்த நிலையிலுள்ள ஒரு உருவம் காணப்படுகின்றது. அதேபோன்று நாணயத்தின் இருபுறத்திலும் பல்வேறு விதத்திலான அடையாளங்களும் குறியீடுகளும் காணப்படுகின்றன. சிங்க நாணயங்கள் பராக்கிரமபாகு மன்னரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள நாணயத்தில் சிறப்பியல்பானதொரு தன்மையைக் காணக்கூடியதாக உள்ளது. அது அந்த நாணயத்தின் முகப்புப் பகுதியில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள மனித உருவத்திற்கு வலது பக்கத்தில் சிங்கத்தின் உருவமொன்று பொறிக்கப்பட்டுள்ளமையாகும். அந்த நாணயங்கள் "சிங்க நாணயங்கள்" என அழைக்கப்பட்டன. மன்னர்களின் பெயர்களைப் பொறித்து வெளியிடப்பட்ட நாணயங்களில் இறுதி நாணயமாக காணப்படுவது இதுவாகும். சேது நாணயம் இந்த நாணயங்கள் 13ஆவது நூற்றாண்டளவில் யாழ்ப்பாணப் பிரதேசத்தில் ஆட்சிபுரிந்த ஆரியச்சக்கரவர்த்தி மன்னராலேயே வெளியிடப்பட்டுள்ளன. இது "தம்பதெனிய மஸ்ஸவைப்" பிரதிபண்ணியதொரு நாணயமாகும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் மாடொன்றின் உருவமும் மறுபக்கத்தில் "தம்பதெனிய மஸ்ஸ" நாணயத்தில் காணப்படுகின்ற நின்ற நிலையிலுள்ள மனிதனின் உருவத்தைப் போன்றதொரு உருவமும் பொறிக்கப்பட்டுள்ளது. நாணயம் செப்பினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்த நாணயங்கள் அதிகமாக நல்லூர், திருநெல்வேலி, கோப்பாய், சண்டிலிப்பாய், சுந்தூர். நாகர்கோவில் மற்றும் மாங்குளம் ஆகிய பிரதேசங்களிலிருந்தே கண்டெடுக்கப்பட்டுள்ளன. |
கண்டியன் நாணயங்கள்
கண்டிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயங்கள்அங்குட்டு மஸ்ஸ/ கொக்கு நாணயங்கள்/ லாரின் தம்பதெனி காசி சல்லி இந்தியன் வறகம துட்டு பனாமா தங்கம் |
கண்டி இராசதானி (1474 - 1815)கண்டி சிங்கள பேரரசின் இறுதி தலைநகரமாக இருந்த்து. ஏறத்தாள 1474ஆம் ஆண்டுப்பகுதியில் நிறுவப்பட்ட கண்டி இராசதானி இலங்கையின் சுயநிர்ணயத்தினை பிரித்தானியாவிற்கு மாற்றம் செய்வதற்காக கையொப்பமிடப்பட்ட 1815 மாச்சு 2ஆம் திகதியிடப்பட்ட 'மலைநாட்டு உடன்படிக்கை' கையொப்பமிடப்படும் வரை சுதந்திரமான இராசதானியாக விளங்கியது. போத்துக்கீசரும் ஒல்லாந்தரும் 16 - 18 நூற்றாண்டுகளில் அதாவது கண்டிய காலப்பகுதியில் கடற்கரையோரங்களில் ஆட்சிமைத்திருந்தனர். "சிங்கலே" எனப்படுகின்ற கண்டிய இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்ட சில நாணய வகைகளைப் பற்றி எமது வரலாற்று ஆவணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
|
|
பத்தாவது நூற்றாண்டில் 'மசுரன்' எனப்படும் தங்க நாணய வகையொன்று பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆயினும் தங்க உலோகத்தின் அரிதான தன்மையின் காரணமாக இந்நாணயங்கள் படிப்படியாக பாவனையில்லாது போயின. இதற்கமைய பதின்மூன்றாம் நூற்றாண்டளவில் 'மசுரன்' என்ற சொல் செப்பு நாணய வகையொன்றுக்கே பயன்படுத்தப்பட்டது. |
வறகம நாணயம் |
வௌ்ளி லரின் - 1 |
வௌ்ளி லரின் - 2 |
|
பதினாறாம் நூற்றாண்டின் இறுதியளவில் 'ரிதி (மஸ்ஸ)' மற்றும் 'பணம' எனப்படும் வெள்ளியினாலான இரண்டு நாணய வகைகள் பயன்பாட்டுக்கு வந்தன. ஆயினும் மேற்படி காலமளவில் 'ரன் பணம' மற்றும் 'ரன் மஸ்ஸ' ஆகிய தங்க நாணயங்கள் ஓரளவு பயன்பாட்டில் காணப்பட்டன. அதன் பின்னர் 'தங்கம் மஸ்ஸ', 'பொடி தங்கம்', 'ரிதிய' ஆகிய நாணயங்கள் பயன்படுத்தப்பட்டன. இந்திய 'வராகம்' பதினெட்டாம் நூற்றாண்டில் இந்திய வராகம் இலங்கையில் பயன்படுத்தப்பட்டது. செப்பினால் செய்யப்பட்ட 'சல்லி' எனப்படுகின்ற நாணய வகையொன்றும் மேற்படி காலத்தில் கொடுக்கல்வாங்கல்களுக்காகப் பயன்படுத்தப்பட்டது. ஒரு ரிதியவின் பெறுமதி 64 சல்லிகளாகும். இதே காலத்தில் ஒல்லாந்தரின் நாணயமொன்றான 'ஸ்ருய்வர்' (Stuiver) கண்டிய இராச்சியத்தில் பயன்படுத்தப்பட்டது. சிங்கள மக்கள் அதனை 'துட்டு' என்று குறிப்பிட்டனர். மூலம்: 'கண்டிய மகா கிளர்ச்சி' - பேராசிரியர் தென்னகோன் விமலானந்த. "பணம்" வைத் தவிர கண்டிய இராசதானிக் காலகட்டத்தில் "லாரின்", "துட்டு", தம்பதெனிய நாணயம், "சல்லி" மற்றும் தங்கம் ஆகிய பல நாணய வகைகளும் பயன்படுத்தப்பட்டுள்ளன. அங்குட்டு மஸ்ஸ நாணயம் கண்டி மற்றும் கோட்டே காலப்பகுதியில் பயன்பாட்டிலிருந்ததுடன் வெள்ளியில் தயாரிக்கப்பட்டிருந்தது. கொக்கியின் வடிவத்தில் தயாரிக்கப்பட்டிருந்த இந்நாணயங்கள் பாரசீகத்திலிருந்து வணிகர்களினால் இலங்கைக்கு கொண்டுவரப்பட்டவை என நம்பப்படுகிறது. இப்பாரசீக நாணயங்கள் 'லாறின்' எனவும் அழைக்கப்பட்டன. இலங்கையில் தனது அநுபவங்கள் பற்றிய குறிப்பில் இந்நாணயங்கள் கண்டி காலகட்டத்தில் அம்மன்னர்கள் இந்நாணயங்களை வார்த்து சுற்றோட்டத்தில்விட்டனர் எனக் குறிப்பிடுகின்றார். |
காலணித்துவ காலகட்டம்
அநுராதபுரம், பொலனறுவை, கண்டி என்றவாறு நாம் பண்டைய இலங்கையின் காலகட்டங்களை பிரித்துக் காட்டிய போதிலும் அந்த எல்லாக் காலகட்டங்களிலும் இலங்கை தனியொரு மன்னரின் கீழ் ஆளப்படவில்லை. பல்வேறு சந்தர்ப்பங்களில் இலங்கை வெளிநாட்டு ஆக்கிரமிப்புகளுக்கும் உள்ளாகியது. ஆயினும் கோட்டை இராசதானி காலகட்டம் வரை இலங்கையை ஆக்கிரமித்தவர்கள் சோழர்களாவர். எனினும் அந்த எல்லாக் காலகட்டங்களிலும் பட்டுப் பாதையின் ஊடாக நடைபெற்ற சர்வதேச வர்த்தகத்தின் அனுகூலங்களின் ஊடாக புகழ் பெறுவதற்கும் அதனைப் பாதுகாப்பதற்கும் எம்மால் இயலுமாயிருந்தது. ஆயினும் கி.பி. 1453 இல் பைசாந்திய பேரரசின் தலைநகரான கொன்ஸ்தாந்திநோபள் வீழ்ச்சியடைந்ததைத் தொடர்ந்து இந்த நிலைமை மாற்றமடைய ஆரம்பித்தது. ஐரோப்பியர்கள் மகா சமுத்திரத்தின் ஊடாக கீழைத் தேசத்திற்கான பாதையைக் கண்டுபிடிப்பதற்கு முயற்சியெடுத்தனர். உண்மையிலேயே அவர்களால் கீழைத்தேசம் மற்றும் மேலைத்தேசம் ஆகிய இரண்டையும் வெற்றிகொள்ள இயலுமாயிருந்தது. இதற்கிணங்க இலங்கை முதலாவதாக போர்த்துக்கேயர்களினதும், இரண்டாவதாக ஒல்லாந்தர்களினதும், இறுதியாக ஆங்கிலேயர்களினதும் ஆட்சிக்கு கீழ்ப்படிய எமக்கு நேரிட்டது.
போத்துக்கேயர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள்
|
போத்துக்கேயர் காலம் (1505 - 1658)1505 ஆம் ஆண்டின் இந்தியாவில் போத்துக்கேய ஆளுநராகவும் அரச பிரதிநிதியாகவும் டொன் பிரான்சிஸ்கோ டி அல்மேதா விளங்கினார். அவரது புதல்வர் லொரென்ஸோ டி அல்மேதா முஸ்லிம்களது கப்பல்களைத் தாக்கி அவற்றைக் கொள்ளையடித்து வந்தார். இவ்வாறு மாலைதீவைக் கடந்து செங்கடலை நோக்கிச் சென்றுகொண்டிருந்த முஸ்லிம் கப்பல் கூட்டமொன்றை துரத்திச் செல்கின்றபோது லொரென்சோ டி அல்மேதா உள்ளிட்ட அவரது குழுவினர் தீடீரென முகம்கொடுத்த பெரும் காற்றின் விளைவாக இலங்கையின் காலிக்கு அண்மையில் கரையொதுங்கியதாகவே அநேகமாகக் கூறப்படுகின்றது. ஆயினும் செல்வத்தின் பின்னால் துரத்திச் சென்றுகொண்டிருந்த போத்துக்கேயர் அப்போது சுபீட்சம் நிறைந்த வர்த்தக மத்திய நிலையமாக காணப்பட்ட இலங்கை மீது பேராசை கொண்டது அத்தகைய தற்செயல் சம்பவமொன்றின் பின்னரே எனக் கூறுவதை நம்ப முடியாது. அந்த சந்தேகத்தை உறுதி செய்கின்ற தகவல்கள் போர்த்துக்கேயரின் கடித ஆவணங்களிலிருந்து வெளிப்படுகின்றன. கி.பி. 1505இல் போத்துக்கீசர் இலங்கையின் கரையோரத்தினை கைப்பற்றி கட்டுப்பாட்டில் கொண்டுவந்த பின்னர் 1506 - 1658 வரையான காலப்பகுதியில் ஒரு சில வேறுபட்ட நாணயங்களை வார்த்து சுற்றோட்டத்திற்குவிட்டனர். |
மலாக்கா மலாக்கா நாணயங்களின் ஒரு பக்கத்தில் போத்துக்கேய அரச சின்னமும் அதன் இரு புறத்திலும் AM அல்லது MA அல்லது DM என்ற எழுத்துக்களும் குறிப்பிடப்பட்டுள்ளன. AM எழுத்துக்களின் சுருக்கம் ஆசிய மலாக்கா என்பதே கருதப்பட்டுள்ளது. அதேபோன்று MA மற்றும் DM எழுத்துக்களின் மூலம் மலாக்கா என்று கருதப்பட்டுள்ளது. நாணயத்தின் மறு பக்கத்தில் "தங்கம்" என்பதைக் காட்டுவதற்காக A மற்றும் T என்ற ஒரு சோடி எழுத்துக்கள் ஒன்றின் மீது ஒன்று அமையக்கூடிய விதத்தில் அமைந்துள்ளதைக் காணலாம். அதேபோன்று நாணயத்தின் அதே பக்கத்தில் அதனை வெளியிட்ட ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. போத்துக்கேயர் இந்த நாணய வகையை இலங்கையில் பயன்படுத்துவதற்காகவென்றே கோவாவில் தயாரித்துள்ளனர். ஆதலால் நாணயத்தின் ஒரு பக்கத்தில் போத்துக்கேய அரச இலச்சினையும் அதன் இரு புறத்திலும் GA என்ற இரண்டு எழுத்துக்களும் மறுபக்கத்தில் DS என்ற இரண்டு எழுத்துக்களும் ஒன்றன்மூது ஒன்று அமையக்கூடிய வித்த்தில் அமைந்துள்ளதைக் காணலாம் இதில் DS என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இலங்கையில் பயன்படுத்தப்பட்ட "டிசெலா" என்ற சொல்லின் சுருக்கமாகும். கினி மஸ்ஸவா கினி மெஸ்ஸ நாணயத்தபை பற்றிக் குறிப்பிடுகின்ற அநேகமானவர்கள் அதனை கினி மஸ்ஸ என்றே அழைக்கின்றனர். ஆயினும் நாணயத்தின் ஒரு பக்கத்தில் காணப்படுகின்ற கினி மெஸ்ஸ எனப்படும் தீ தட்டு காரணமாக அதனை கினி மெஸ்ஸ என்றே குறிப்பிடுதல் வேண்டும்.போர்த்துக்கேயர்கள் கி.பி. 1505இல் இந்நாட்டில் காலடியெடுத்து வைத்து, திரும்பிச் செல்வதற்கு முன்னர் கொழும்பில் சிறியதொரு கோட்டையைக் கட்டி அதனை புனிதர் லோரன்ஸின் பெயரில் அர்ப்பணிப்பணித்துள்ளனர். அந்தப் புனிதர் தீ தட்டு ஒன்றின் (கினி மெஸ்ஸ) மீது தீயில் எரிந்தே இறந்துள்ளார். இந்த சம்பவத்தை நினைவுகூரும் முகமாகவே கினிமெஸ்ஸ நாணயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. ஆதலால் இந்த நாணயம் மேலைத்தேயத்தவர்கள் இந்நாட்டில் வெளியிட்ட முதலாவது ஞாபகார்த்த நாணயமாக இருக்கலாம். கினி மெஸ்ஸ நாணயம் 1640 இல் "தங்கம்" நாணயமாகவும் 1675இல் "துவி தங்கம்" நாணயமாகவும் வெளியிடப்பட்டுள்ளது. புனிதர் நாணயங்கள் புனிதர் நாணயத் தொகுதியின் ஒரு பக்கத்தில் போத்துக்கல் அரச இலச்சினையும் அதன் இரு புறத்திலும் புயு என்ற எழுத்துக்களும் மறு பக்கத்தில் புனிதர் ஒருவரின் உருவப்படமும் நாணயம் வெளியிடப்பட்ட ஆண்டும் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோன்று எந்தப் புனிதர் அதில் பொறிக்கப்பட்டுள்ளார் என்பதைக் காட்டுவதற்கு உருவப்படத்தின் இருபுறமும் ளுவு மற்றும் ளுகு ஆகிய எழுத்துக்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றின் மூலம் புனித தோமஸ், புனித பிலிப் ஆகிய புனிதர்கள் காட்டப்பட்டுள்ளனர். போர்த்துக்கேய ஆட்சிக் காலத்தில் இந்த நாணயங்களுக்கு மேலதிகமாக 'குரூசாடோ", "சக்ரம்", 'பணம்", "லாரின்ஸ்" ஆகிய வேறு நாணய வகைகளும் இந்தியாவில் போன்று தங்க 'பகோடி", தங்க "பணம்" மற்றும் வெள்ளி 'பணம்" ஆகியனவும் கொடுக்கல்வாங்கலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளன. |
ஒல்லாந்தர் காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள்
|
ஒல்லாந்தர் காலம் (1658 - 17956)கி.பி 1658இல் இலங்கையின் கரையோரப் பகுதிகளிலிருந்து போர்த்துக்கேயர்களை விரட்டியடித்த ஒல்லாந்தர்கள் அப்பிரதேசங்களை தமது ஆட்சியின் கீழ் கொண்டுவந்தனர். முதலாவதாக 1638இல் மட்டக்களப்பும், 1640இல் காலியும், 1656இல் கொழும்பும், 1658இல் யாழ்ப்பாணமும் ஒல்லாந்தரின் ஆட்சியின் கீழ் வந்தன. 1638இல் மட்டக்களப்பில் இருந்த போர்த்துக்கேயர்களின் கோட்டையைக் கைப்பற்றிய ஒல்லாந்தர்கள் இரண்டாவது இராஜசிங்க (1635 - 1687) மன்னருடன் உடன்படிக்கையொன்றைச் செய்துகொண்டனர். அதன் 14வது வாசகத்தில் நாணயப் பயன்பாடு தொடர்பான பல ஒழுங்குவிகிகள் சேர்க்கப்பட்டிருந்தன. இதற்கமைய மன்னரால் அல்லது ஒல்லாந்த அரசாங்கத்தினால் நியமிக்கப்படாத எவராலும் நாணயங்களை அச்சிடல், தயாரித்தல், விளம்பரம் செய்தல் அல்லது நாணயங்களுக்கு நிகராக தரக் குறைவான நாணயங்களை தயாரித்தல் அல்லது சுற்றோட்டத்திற்கு விடுத்தல் சட்டத்திற்கு மாறானதாகும்.
|
தொய்த்துக்கள் அக்காலத்தில் கொடுக்கல் வாங்கல்களின்போது அதிகமாக 'தொய்த்து' நாணயங்களே பயன்படுத்தப்பட்டன. இவை மிகச் சிறிய செப்பு நாணய வகையாகும். ஆதலால் கொடுக்கல் வாங்கல்களின்போது பெருந் தொகையான மேற்படி சிறிய செப்பு நாணயங்களை கணிப்பிடுதல் இலகுவாயிருக்கவில்லை. இந்த வசதியீனத்திலிருந்து மீள்வதற்கு 1737 ஆம் ஆண்டளவில் அப்போது பயன்படுத்தப்பட்ட 'தொய்த்து' நாணயங்களை 8, 16, 24 வீதம் கோர்வை செய்து நாணயக் கோர்வைகளாக 'துட்டு' 2, 4, 6 பெறுமதியைக் கொண்டதாக கொடுக்கல் வாங்கல்களுக்கு பயன்படுத்த நடவடிக்கையெடுக்கப்பட்டிருந்தது. ஆயினும், 18ஆவது நூற்றாண்டில் ஒல்லாந்தர் அவர்களது 'துட்டு" நாணயங்களை இலங்கையில் அச்சிட ஆரம்பித்தனர். ஒல்லாந்தர்கள் இலங்கையில் நாணயங்கiஅச்சிட்ட முதலாவது வார்ப்படத் தொழிற்சாலை 1781இல் கொழும்பு கெய்மன் வாயிலுக்குப் பக்கத்திலேயே நிறுவப்பட்டிருந்தது. இந்த நாணயங்களுக்கு மேலதிகமாக 'ரிக்ஸ் டொலரும்" இக்காலத்தில் இலங்கையில் பயன்படுத்தப்பட்ட ஒல்லாந்த நாணய வகையொன்றாகும். அது சிங்களத்தில் 'பதாக" என்ற பெயரில் அழைக்கப்பட்டது. இது வெள்ளி நாணய வகையொன்றாகும். ஒரு ரூபா வெள்ளி நாணயமும் ஒல்லாந்தர்களால் எமது நாட்டிற்கு அறிமுகப்படுத்தப்பட்டது. இது 1781 இலும் 1786 இலும் வார்க்கப்பட்டுள்ளது. நாணயத்தின் முகப்பில் கொழும்பு ஒல்லாந்த கம்பனியின் நாணயம் என்பதும் பின் பக்கத்தில் இலங்கைத் தீவின் நாணயம் என்பதும் அரேபிய மொழியில் குறிப்பிடப்பட்டுள்ளது. நாணயத்தின் மறு பக்கத்தில் வெளியிடப்பட்ட ஆண்டு குறிப்பிடப்பட்டுள்ளது. |
சி தொய்த்து |
அரை கொலண்டின தொய்த்து |
அரை உற்றிச்த் தொய்த்து |
|
கொலண்டின தொய்த்து |
கால் சி தொய்த்து |
ரீ தொய்த்து |
||
உற்றிச்த் தொய்த்து |
மேற்கு பிரீஸ்லாந்து தொய்த்து |
ஷீலாண்ஷயா தொய்த்து |
துமாதூண் |
பதவியன் மின்டக் |
சிலோன் ஸ்ருய்வர்ஸ் - 1 |
சிலோன் ஸ்ருய்வர்ஸ் - 2 |
சிலோன் ஸ்ருய்வர்ஸ் - 3 |
முதலாவது வங்கி நாணயத் தாள்கள் இலங்கையில் ஒல்லாந்தரின் ஆட்சிக் காலத்தின் இறுதிப் பகுதி வரை கொடுக்கல் வாங்கலின் பொருட்டு நாணயக் குத்திகளே பயன்படுத்தப்பட்டன. ஆயினும் 1700 களின் இறுதிப் பகுதியின் போது ஒல்லாந்தரின் பாதுகாப்புச் செலவுகள் அதிகரித்தன. திறைசேரியை முழுமையாகவே வெற்றாக்கிவிட்டு, செலவு வருமானத்தைத் தாண்டிச் சென்றது. அத்தகையதொரு பின்னணியிலேயே நாணயத் தாள்களுக்கான அடிப்படை இடப்பட்டது. இதற்கிணங்க, 1785 மாச்சு 19 ஆம் திகதி 25000 பதாக பெறுமதியுடைய நாணயத் தாள்களை அச்சிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதற்கிணங்க இலங்கையின் முதலாவது நாணயத் தாள் தொகுதி 1785 மே மாதம் 10 ஆம் திகதி தோன்றியது. அந்த முதலாவது நாணயத் தாள் தொகுதி பதாக 50, 100, 500, மற்றும் 1000 பெறுமதிகளைக் கொண்டிருந்தது. ஆயினும் பின்னர் பதாக 1, 2, 3, 4, 5, 10 நாணயத் தாள்களும் அச்சிடப்பட்டுள்ளன. இந்த நாணயத் தாள்கள் மூன்று அரசாங்க அலுவலர்களின் கையொப்பத்துடன் கூடியதாக காணப்பட்டன. |
ஒரு பதாகாவிற்குச் சமமான வங்கித்தாள் |
பிரித்தானிய காலத்தில் பயன்படுத்தப்பட்ட நாணயக் குத்திகள்
|
பிரித்தானியர் காலம் (1796 - 1948)பிரஞ்சுப் புரட்சி ஐரோப்பிய அரசுகளிடையே பெரும் அதிர்வொன்றினைத் தோற்றுவித்ததுடன் 1796இல் ஒல்லாந்தர், பிரித்தானியரின் மூலம் மிக இலகுவாக அகற்றப்பட்டனர். பிரித்தானியர் 1815இல் கண்டி இராசதானியின் கட்டுப்பாட்டினை வெற்றிகொண்டதன் மூலம் முழுத்தீவையும் ஆளும் அதிகாரத்தினைக்கொண்ட முதலாவது ஐரோப்பியராக மாறினர். 1802இல் இலங்கை முடிக்குரிய குடியேற்ற காலணியாக மாறியதெனினும் 1818 இலேயே தீவு முழுவதற்குமான ஒரேநிருவாகம் ஏற்படுத்தப்பட்டது. |
இலங்கையின் கொடுக்கல்வாங்கல்களுக்காக ஆங்கிலேயர்கள் முதலில் இரண்டு வகை நாணயங்களைப் பயன்படுத்தினர். அதில் ஒன்று, அப்போது அவர்கள் சென்னையில் வார்த்த 'தாரகை பகோடி' எனும் தங்க நாணயமாகும். அது 45 பணத்துக்கு அல்லது 180 துட்டுக்கு சமமாகக் காணப்பட்டது. மற்றைய நாணயம் செப்பு நாணய வகையொன்றாகும். அது 1794 மற்றும் 1797 இல் இங்கிலாந்தில் அச்சிடப்பட்ட நாணயமாகும். அது ரூபாவில் 1/96 (தங்க நாணயம்) மற்றும் 1/48 (வெள்ளி நாணயம்) பெறுமதியைக் கொண்டதாகும். அந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் 'ஐக்கிய கிழக்கிந்திய கம்பனி' என்பதும் நாணயம் அச்சிடப்பட்ட ஆண்டும் குறிப்பிடப்பட்டிருந்தது. மறு பக்கத்தில் அரச இலச்சினையும் நாணயத்தின் பெறுமதியும் குறிப்பிடப்பட்டிருந்தன.
481-1ஆவது ஸ்ரிவர் |
அனா 2 |
48-1 ரூபா |
பணம் டோக்கன் |
பாதிங் |
அவர்கள் 1801 இல் ஒரு துட்டு,½ துட்டு மற்றும் ¼ துட்டு நாணயங்களை வெளியிட்டிருந்தனர். அந்த நாணயங்களின் ஒரு பக்கத்தில் யானையின் உருவமும் வெளியிடப்பட்ட ஆண்டும், மறு பக்கத்தில் சுற்றிலும் ஷஇலங்கை அரசாங்கம்| என்பதும் அதன் மத்தியில் பெறுமதியும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒரு துட்டு நாணயத்தின் பெறுமதி 48 என்றவாறே குறிப்பிடப்பட்டிருந்தது. ½ துட்டு நாணயத்தில் 96 எனவும் ¼ துட்டு நாணயத்தில் 192 எனவும் குறிப்பிடப்பட்டிருந்தது. ஒவ்வொரு நாணய வகையிலும் பதாகவுக்கு சமனாகின்ற எண்ணிக்கையே அவ்வாறு குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நாணயங்கள் 1801 முதல் 1804 வரை பல தடவைகள் அச்சிடப்பட்டுள்ளன. |
பெனிஸ் |
பிரித்தானிய இந்திய ரூபா |
நாணயங்களுக்கு மேலதிகமாக ஆங்கிலேயர்கள் ஒல்லாந்தர்களைப் போன்றே நாணயத் தாள்களையும் வெளியிட்டனர். முதலாவது நாணயத் தாள் தொகுதி 1800 இல் வெளியிடப்பட்டது. 1801 வரை ஆங்கிலேயர்கள் புத்தகங்களில் கணக்குகளைப் பதிவு செய்தது தாரகை பகோடி முறையிலாகும். ஆயினும் இந்நாட்டில் ஆங்கிலேயர்களின் ஆட்சியின் கீழ் காணப்பட்ட பகுதிகள் 1802 இல் காலணித்துவ நாடுகளுக்கு பொறுப்பான செயலாளர் நாயகத்தின் கீழ் வந்ததைத் தொடர்ந்து அந்த முறை மாற்றமடைந்தது. அன்று முதல் அந்த முறையானது பதாக, பணம் மற்றும் துட்டு முறையாக மாற்றமடைந்தது. இதற்கமைய 1/4 தாரகை பகோடி = 1 பதாக இற்குச் சமமானதாகக் காணப்பட்டது.
1808 முதல் 1818 வரை காலத்திற்குக் காலம் பதாக ½, 1 மற்றும் 2 பதாகப (வெள்ளி) நாணயங்கள் அச்சிடப்பட்டதோடு அவற்றின் பெறுமதி முறையே 24, 48 மற்றும் 96 என்றவாறே குறிப்பிடப்பட்டிருந்தது. அதேபோன்று 1803-1817 காலத்தில் ஒரு பணம், ஒரு துட்டு மற்றும் 2 துட்டு செப்பு நாணயங்களும் வெளியிடப்பட்டுள்ளன.
2 சதங்கள் - 1895 |
1 சதம் - 1945 |
5 சதங்கள் - 1909 |
25 சதங்கள் - 1899 |
50 சதங்கள் - 1942 |
பிரித்தானிய ஆட்சிக் காலத்தில் பார்தீன், பிரித்தானிய துட்டு, பதாக (வெள்ளி நாணயம்), பணம், இந்திய ரூபாய், அரை ரூபா, கால் ரூபா ஆகியன பயன்படுத்தப்பட்டுள்ளன. இவற்றைத் தவிர ரூபாவைவிடக் குறைந்த பெறுமதியிலான நாணயங்களாக ஒரு சதம், இரண்டு சதம், ஐந்து சதம், பத்து சதம், இருபத்தைந்து சதம், ஐம்பது சதம் ஆகியனவும் பயன்படுத்தப்பட்டன. 1815இல் எதிர்நோக்கப்பட்ட மிகப்பெரும் பற்றாக்குறைக்கு தீர்வு காணும்பொருட்டு ஒல்லாந்தரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட பெரும் எண்ணிக்கையான தொய்த்த்தினை (37,339 பதாகா பெறுமதிவாய்ந்தமை) இவர்கள் தமது சொந்த நாணயமாக மீளச் சுற்றோட்டத்திற்கு விடப்பட்டனர். |
10 சதங்கள் - 1900 |
2 சதங்கள் - 1944 |
1 ரூபாய் - 1884 |
பிரித்தானியர் காலத்தில் தாள் நாணயங்கள் மூன்றி அதிகாரிகளினால் வெளியிடப்பட்டன:
1. பொது திறைசேரியினால் வெளியிடப்பட்ட தாள்கள் (1827 - 1855) பவுண் ஒருபவுண் இரண்டு பவுண் ஐந்து பவுண் |
2. தனியார் வங்கிகளினால் வெளியிடப்பட்ட தாள்கள், அவையாவன (1844 - 1884) (i) பவுண் தாள்கள் |
3. நாணய ஆணையாளர்கள் சபையினால் வெளியிடப்பட்ட தாள்கள் (இலங்கை அரசாங்கத்தின் கீழ்) (1884 - 1950) ஆணையாளர் சபையில் உள்ளடக்கப்பட்டோர் வருமாறு பொருளாளர் காலனித்துவச் செயலாளர் கணக்காய்வாளர் நாயகம் |
துணை நாணயத் தாள்கள்
அவசரகாலச் சட்ட அதிகார ஒழுங்குகளின் கீழ், 1939, 1940 இல் நாணயக் குத்திகளின் பற்றாக்குறையினை தவிர்க்கும் பொருட்டு ஒரு ரூபாவிற்கு குறைந்த இன நாணயக் குத்திகளை வெளியிடுவதற்கு நாணயச் சபைக்கு அதிகாரமளிக்கப்பட்டது. நாணய ஆணையாளர்கள் சபையானது 5 சதங்கள், 10 சதங்கள், 25 சதங்கள், 50 சதங்கள் மற்றும் 1 ரூபா போன்ற பெறுமதிகளுக்கான துணை நாணயத்தாள்களை வெளியிட்டது. இவற்றில் 5 சதங்களானது 2 சதம் மற்றும் 3 சதங்கள் போன்ற முத்திரைகளினை ஒத்தவிதத்தில் காணப்பட்டன.
இத்தகைய, துணை நாணயத் தாள்களுக்கு மேலதிகமாக, ஆணையாளர்கள் சபையிலானது 1ரூபா. 2 ரூபாய்கள், 5 ரூபாய்கள், 10ரூபாய்கள், 50 ரூபாய்கள், 100 ரூபாய்கள், 500 ரூபாய்கள், 1000 ரூபாய்கள் மற்றும் 10000 ரூபாய்கள் போன்ற பெறுமதியுடைய தாள்களையும் வெளியிட்டது. இவ் 10000 ரூபா தாள்களானது வங்கிகளுக்கிடையிலான கொடுக்கல்வாங்கல்களுக்காக மட்டும் பயன்படுத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டதிலிருந்து சுதந்திரத்திற்குப் பின்னரான காலம்
1949இன் 58ஆம் இலக்க நாணயச் சட்ட விதியின் படி 1950 ஓகத்து 28இல் இலங்கை மத்திய வங்கி நிறுவப்பட்டது. நாணயச் சட்ட விதி, நாணயச் சபையினை நிறுவுவதற்கும் நாணயத் தாள்கள், நாணயக் குத்திகள் ஆகிய இரண்டும் உட்பட நாணயத்தினை வெளியிடுவதற்கும், மற்ற விடயங்களோடு இதனை நிர்வகிப்பதற்கும் வசதியளிக்கின்றது.
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட நாணயக் குத்திகள்
பிரித்தானியர்களால் வெளியிடப்பட்ட நாணயத்தாள்கள் இலங்கையில் 1951 வரையும் நாணயக் குத்திகள் 1963 வரையும் பயன்படுத்தப்பட்டன. முதல் நாணயக் குத்தித் தொடர்கள் 1963இல் அறிமுகப்படுத்தப்பட்டன. இந்நாணயக் குத்திகளின் தொடரில் இலங்கையின் சின்னம் அதன் முகப்புப் பக்கத்தில் அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. நாணயக் குத்திகளின் இனங்கள் வருமாறு:
ஒரு சதம் (அலுமினியம்) |
இரண்டு சதம் (அலுமினியம்) |
ஐந்து சதம் (பித்தளை) |
பத்து சதம் (பித்தளை) |
இருபத்தைந்து சதம் (செம்பு/ நிக்கல்) |
ஐம்பது சதம் (செம்பு/ நிக்கல்) |
ஒரு ரூபா (செம்பு/ நிக்கல்) |
ஐந்து ரூபா மற்றும் இரண்டு ரூபா தாள்களுக்கு பதிலாக 1984இல் ரூபா 5 (நிக்கல்/பித்தளை) மற்றும் ரூபா 2 (செம்பு/நிக்கல்) சுற்றோட்ட நாணயக் குற்றிகள் அறிமுகப்படுத்தப்பட்டன.
2005இல் மத்திய வங்கி நிறை, உலோகம் என்பனவற்றை மாற்றியமையின் மூலம் ரூ.5 மற்றும் ரூ.2 புதிய நாணயக்குத்திகளை சுற்றோட்டத்திற்குவிட்ட வேளையில் அளவு, உலோகம், நிறை மற்றும் நிறம் என்பனவற்றை மாற்றி ரூ.1, சதம் 50 மற்றும் சதம் 25 நாணயக்குத்திகளை வெளியிட்டது.
2009இல் ஏற்கனவேயுள்ள நாணயக் குற்றி தொடர்களுக்கு ரூபா 10 புதிய ரூபா சுற்றோட்ட நாணயக் குற்றி அறிமுகப்படுத்தப்பட்டது. 11 கோண வடிவத்துடன் நிக்கல் முலாமிடப்பட்ட உலோகத்தைக் கொண்டு நாணயக் குற்றிகள் உருவாக்கப்பட்டன.
2016இல், 1 ரூபா மற்றும் 5 ரூபா நாணயக் குற்றிகளின் உலோகம் நீண்ட பாவனை மற்றும் குறைந்தளவான செலவைக் கருத்திற்கொண்டு, பித்தளை முலாமிடப்பட்ட உருக்கிலிருந்து துருப்பிடிக்காத உருக்கிற்கு மாற்றப்பட்டன. மேலும், மேலதிக செலவை குறைப்பதற்கு 5 ரூபாவிலுள்ள விளிம்பில் காணப்படுகின்ற எழுத்துக்கள் நீக்கப்பட்டன.
2017இல், நாணயக் குற்றிகளின் வார்த்தல் செலவுகளை குறைத்தல், நாணயக் குற்றிகளின் நீடித்துழைக்கும் தன்மையை அதிகரித்தல், அதிகளவிலான பெயர்வுதிறனை அளித்தல் மற்றும் கட்புலனாகாதவர்கள் இலகுவில் இனங்காணுதல் ஆகியவற்றின் குறிக்கோள்களுடன் ரூ.10, ரூ.5, ரூ.2 மற்றும் ரூ.1 (துருப்பிடிக்காத உருக்கு - AISI 430) போன்றவற்றின் முகப்பு பெறுமதியுடன் சுற்றோட்ட நாணயக் குற்றிகளின் புதிய தொடர்கள் அறிமுகப்படுத்தப்பட்டன. அதற்கமைவாக, அனைத்து நான்கு நாணயக் குற்றிகளினதும் பருமன், நிறை, வடிவம், விளிம்பு மற்றும் வடிவமைப்பு மாற்றப்பட்டு அளவு மற்றும் தடிமத்தின் முன்னேற்றமான மாதிரியைப் பிரதிபலித்தது. முன்னர் வெளியிடப்பட்ட நாணயக் குற்றிகளுடன் இப்புதிய நாணயக் குற்றிகள் சுற்றோட்டப்படுத்தப்பட்டுள்ளன.
இலங்கை மத்திய வங்கியினால் 1950 இல் இருந்து பதினொரு நாணயத்தாள் தொடர்கள் வெளியிடப்பட்டுள்ளன;
கருப்பொருள் | இனங்கள் (ரூ.) | வருடம் | |
1 | VI வது ஜோஜ் மன்னர் தொடர்கள் | 1 மற்றும் 10 | 1951 |
2 | II ஆவது எலிசபெத் அரசியின் தொடர்கள் | 1, 2, 5, 10, 50 மற்றும் 100 | 1952 |
3 | இலங்கையின் படைக்கலச் சின்னத்தின் தொடர்கள் | 1, 2, 5, 10, 50 மற்றும் 100 | 1956 |
4 | எஸ் டபிள்யூ ஆர் டீ பண்டாரநாயக்காவின் உருவப்படத் தொடர்கள் | 2, 5, 10 ,50 மற்றும் 100 | 1962 |
5 | பராக்கிரமபாகு மன்னனின் தொடர்கள் | 2, 5, 10 ,50 மற்றும் 100 | 1965 |
6 | இலங்கையின் படைக்கலச் சின்னத்தின் தொடர்கள் | 50 மற்றும் 100 | 1975 |
7 | தேசத்தின் மிருக, தாவரத் தொடர்கள் | 2, 5, 10, 20 ,50 மற்றும் 100 | 1979 |
8 | வரலாற்று, தொல் பொருள் தொடர்கள் | 5, 10, 20, 50, 100, 500 மற்றும் 1000 | 1981 |
9 | வரலாற்று, அபிவிருத்தி தொடர்கள் | 500 மற்றும் 1000 | 1987 |
10 | இலங்கையின் பாரம்பரியத் தொடர்கள் | 10, 20, 50, 100, 500, 1000 | 1991 |
2000 | 2005 | ||
11 | அபிவிருத்தி, சுபீட்சம் மற்றும் இலங்கை நடனக் கலைஞர்கள் | 20, 50, 100, 500, 1000, மற்றும் 5000 | 2011 |