அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்
நிதி மற்றும் குத்தகைக் கம்பனிகள்
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் நிதிக் கம்பனியொன்று என்ற வகையில் உரிமத்தைப் பெறுவதற்கான அடிப்படை தேவைப்பாடு யாது?
- நிறுவனங்களின் பதிவாளரிடம் பொதுக் கம்பனியொன்றாகப் பதிவுசெய்திருத்தல்
- இலங்கை மத்திய வங்கி நிர்ணயித்த தொகையை விடவும் குறைவாக கிடைக்கக்கூடிய மைய மூலதனம் - நடைமுறை மைய மூலதனம் ரூ.2.5 பில்லியன்
- நிதிக் கம்பனிகளுக்கு ஏற்புடைய பணிப்புரைகள் மற்றும் விதிகளுடன் இணங்கியொழுகுவதற்கான இயலாற்றல்
- 2012ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதித் தொழில் சட்ட (விண்ணப்பம்) விதியில் வழங்கப்பட்டதற்கமைவாக, இலங்கை மத்திய வங்கிக்கு விண்ணப்பமொன்றை சமர்ப்பித்தல்
2016ஆம் ஆண்டின் 06ஆம் இலக்க நுண்நிதியளிப்புச் சட்டத்தின் நுண்நிதிக் கம்பனியாக உரிமத்தைப் பெறுவதற்கான அடிப்படை தேவைப்பாடு யாது?
- நிறுவனங்களின் பதிவாளரிடம் பொதுக் கம்பனியொன்றாகப் பதிவுசெய்திருத்தல்
- இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை நிர்ணயித்த தொகையை விடவும் விஞ்சாது கிடைக்கக்கூடிய மைய மூலதனம் - நடைமுறை மைய மூலதனம் ரூ.150 மில்லியன்
- உரிமம்பெற்ற நுண்நிதிக் கம்பனிகளுக்கு ஏற்புடைய பணிப்புரைகள் மற்றும் விதிகளுடன் இணங்கியொழுகுவதற்கான இயலாற்றல்
- 2016ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க நிதித் தொழில் சட்ட (விண்ணப்பம்) விதியில் வழங்கப்பட்டதற்கமைவாக, இலங்கை மத்திய வங்கிக்கு விண்ணப்பமொன்றை சமர்ப்பித்தல்
நுண்நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற/பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் யாவை?
- நுண்நிதியளிப்புச் சட்டத்தின் 4ஆம் பிரிவின் கீழ் நாணயச் சபையினால் உரிமம்பெறப்பட்ட உரிமம்பெற்ற நுண்பாகநிதிக் கம்பனிகள்
- தன்னார்வ சமூக சேவை அமைப்பின் பதிவாளரினால் பதிவுசெய்யப்பட்ட நுண்பாகநிதி அரசசார்பற்ற அமைப்புக்கள்.
பண வழங்கலில் ஈடுபடுவதற்கு நுண்நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் உரிமமொன்றைப் பெற வேண்டுமா?
“நுண்பாகநிதி வியாபாரத்தில்” ஈடுபடும் ஆட்கள் அதன் கீழ் உரிமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும் என்று நுண்நிதிச் சட்டம் கட்டாயப்படுத்துகின்றது. “நுண்பாக நிதி” என்பது நுண்நிதியளிப்புச் சட்டத்தில் “வைப்புக்களை ஏற்றுக்கொள்வது மற்றும்:-
(அ) எதேனும் வடிவத்தில் நிதியியல் வசதியை;
(ஆ) ஏனைய நிதியியல் சேவைகளை; அல்லது
(இ) ஏதேனும் வடிவத்தில் நிதியியல் வசதியை மற்றும் நிதியியல் வசதிகளை வழங்குவது எனப்படுகின்றது”.
எனவே, தற்போது நடைமுறையிலுள்ள சட்டக்கட்டமைப்பிற்கிணங்க, வைப்புத் தொகையை ஏற்காமல் பண வழங்கலில் ஈடுபடுகின்ற ஆளொருவர் நுண்நிதியளிப்புச் சட்டத்தின் கீழ் உரிமத்தைப் பெறுவது கட்டாயமில்லை.
நிதிக் குத்தகைக்கும் வாடகைக்கு கொள்வனவு செய்வதற்குமிடையிலான வேறுபாடு யாது?
நிதிக்குத்தகைக்கும் வாடகைக்கு கொள்வனவுசெய்வதற்குமிடையில் பல ஒத்தத்தன்மைகள் காணப்படுகின்றதுடன் சிலசமயங்களில், இரு உற்பத்திகளுக்கிடையில் வேறுபடுத்துவது கடினமாகவிருக்கலாம். எனினும், உற்பத்திகளுக்கிடையில் பின்வரும் வேறுபாடுகள் அவதானிக்கப்படலாம்.
- 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைச் சட்டத்தின் கீழ் நிதிக் குத்தகை ஒழுங்குமுறைப்படுத்தப்படுவதுடன் 1982ஆம் ஆண்டின் 29ஆம் இலக்க வாடிக்கையாளர் கொடுகடன் சட்டத்தின் வாடகை கொள்வனவு ஒழுங்குமுறைப்படுத்தப்படுகின்றது.
- இலங்கை மத்திய வங்கி என்பது நிதி குத்தகைக்குவிடும் சட்டத்தின் நடைமுறைப்படுத்தும் அதிகாரசபையாக காணப்படுவதுடன் வாடகைக் கொள்வனவிற்கு குறித்த நடைமுறைப்படுத்தும் அதிகாரசபையென காணப்படுவதில்லை.
- நிதி குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட குத்தகை நிறுவனங்கள் மாத்திரம் நிதி குத்தகை தொழிலில் ஈடுபடலாம். எந்தவொரு ஆளும் வாடிக்கையாளர் கொடுகடன் சட்டத்தின் கீழ் வாடகைக் கொள்வனவு தொழிலில் ஈடுபடலாம்.
- ஒரு ஆண்டிற்கும் குறைவான காலத்திற்கு நிதிக் குத்தகையை மேற்கொள்ள முடியாதெனினும், வாடகைக் கொள்வனவை எந்தவொரு காலத்திற்கும் மேற்கொள்ள முடியும்.
- நிதிக் குத்தகையில், உடமைப்படுத்தலுக்காக குத்தகைக்கு பெறுபவர் குத்தகைக்கு விடுபவருக்கு பணம் செலுத்துகின்றதுடன் அத்தொகைகளின் உபகரணங்களின் பயன்பாடு குறிப்பாக ஒட்டுமொத்த பதிவழிப்பை அல்லது தொடர்புடைய உபகரணங்களின் செலவின் கணிசமானப் பகுதியைக் கருத்திற்கொண்டு கணக்கிடப்படும். வாடகைக் கொள்வனவில் பொருட்களை உடமைப்படுத்தலானது காலாந்திர தவணைகளில் அத்தகைய ஆள் உடன்பட்ட தொகையை செலுத்துகின்ற நிலைமை தொடர்பில் ஆளொருவருக்கு பொருட்களின் உடமை அதனுடன் உடமையாளரினால் வழங்கப்படுகின்றது.
- நிதிக் குத்தகையில் தொடர்புடைய உபகரணப் பயன்பாட்டின் இடர்நேர்வும் வெகுமதிகளும் குத்தகைக்கு விடுபவரிடம் இருக்கும் எனவே குத்தகைக் காலம் முடிந்த பிறகும், உபகரணங்களின் உடமை குத்தகைக்கு பெறுபவரின் உடன்பாடு கிடைத்தாலொழிய குத்தகைக்கு விடுபவரிடம் இருக்கும் என்பதுடன் வாடகைக் கொள்வனவில், உபகரணங்களைப் பயன்படுத்துவதிலுள்ள இடர்நேர்வும் வெகுமதிகளும் வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையில் நுழைந்தவுடன் வாடகைதாரருக்கு மாற்றப்படுகின்றதுடன் உடமையானது இறுதி தவணை செலுத்தியவுடன் உடனடியாக வாடகைக்கு கொள்வனவு செய்பவருக்கு மாற்றப்படுகின்றது.
- நிதிக் குத்தகையில் குத்தகைக்கு பெறுபவர் குத்தகை காலத்தின் இறுதியில் உபகரணங்களின் உடமையை கையளிக்க வேண்டும் என்பதுடன் வாடகைக் கொள்வனவில் வாடகைதாரர் வாடகை காலத்தின் இறுதியில் உபகரணங்களை வைத்திருப்பதற்கு உரித்துடையவராவர்.
- நிதிக் குத்தகையில், நிதிக் குத்தகை காலப்பகுதியில் எந்தவொரு நேரத்திலும் குத்தகை உடன்படிக்கையின் கணிசமான தோல்வி ஏற்படுமாயின், குத்தகைதாரருக்கு உபகரணங்களை மீள்உடமையாக்குவதற்கு குத்தகைக்கு விடுபவருக்கு உரிமையுண்டு. எனினும், வாடகைக் கொள்வனவில், வாடகைக் கொள்வனவு விலையில் 75 சதவீதம் வாடகைதாரரினால் செலுத்தப்படும் போது, உபகரணங்களை மீள்உடமையாக்குவதிலிருந்து உடமையாளர் தடுக்கப்படுகின்றார்.
நிதிக் குத்தகைத் தொழிலில் யார் ஈடுபடலாம்?
இலங்கை மத்திய வங்கியினால் நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிறுவனங்கள் நிதிக் குத்தகைத் தொழிலில் ஈடுபடலாம். https://www.cbsl.gov.lk/authorized-financial-institutions/registered-finance-leasing-establishments என்ற இலங்கை மத்திய வங்கியின் இணையத்தளத்தில் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகை தாபனங்களின் பட்டியல் தரப்பட்டுள்ளது.
வாடகைக் கொள்வனவு தொழிலில் யார் ஈடுபடலாம்?
எந்தவொரு நபரும் வாடிக்கையாளர் கொடுகடன் சட்டத்தின் கீழ் வாடகைக் கொள்வனவு உடன்படிக்கையை மேற்கொள்ளலாம். இது வாடகைக் கொள்வனவு தொழிலுக்காக எந்தவொரு பதிவுசெய்தல்/உரிமம் சார்ந்த நடைமுறைகளை வழங்குவதில்லை.
குத்தகை உடன்படிக்கையின் கீழ் சொத்தொன்றின் உடமையையும் பயன்பாட்டையும் மூன்றாம் தரப்பினருக்கு மாற்ற முடியுமா?
நிதி குத்தகைக்குவிடும் சட்டத்தின் 25(1) பிரிவிற்கமைவாக, குத்தகைக்கு பெறுபவர் குத்தகைக்கு விடுபவரின் எழுத்து மூலமான அனுமதியின்றி மற்றும் மூன்றாம் தரப்பினரின் எந்தவொரு உரிமைகளுக்குட்பட்டு, நிதிக்குத்தகையின் கீழ் உபகரணத்தை கொண்டிருப்பதற்கும் பயன்படுத்துவதற்குமான உரிமையை வேறுஎவருக்கும் மாற்றலாகாது.
குத்தகைக்குப் பெறுபவர் (வாடிக்கையாளர்) எப்போது குத்தகை/நிதிக் கம்பனிக்கு வாகனத்தைத் திருப்பி அனுப்ப வேண்டும்?
நிதிக் குத்தகையின் காலம் முடிவடைந்ததும் அல்லது நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் ஏற்பாடுகளின் கீழ் அதன் முன்னைய முடிவுறுத்தலுடன், நிதிக் குத்தகைக்கு தரப்பினர்களினால் உடன்பட்டு, தேய்விற்கும் ஏதேனும் மாற்றல்களுக்கும் உட்பட்டு குத்தகைக்கு பெறுபவருக்கு வழங்கப்பட்ட நிலையில் குத்தகைக்குப் பெறுபவருக்கு உபகரணங்கள் விநியோகிக்கப்படுதல் வேண்டும்.
குத்தகை/நிதிக் கம்பனி சட்ட ஏற்பாடுகளிற்கிணங்க, வாகனத்தை எவ்வாறு மீட்டெடுக்கலாம்?
குத்தகைக்கு விடுபவருக்கு வாகனத்தை மீட்டெடுப்பதற்கு இரு வழிகள் உள்ளன. குத்தகைக்கு விடுபவரின் மூலம் மீட்டெடுத்தல் அல்லது நீதிமன்றங்களினூடாக உபகரணங்களை மீட்டெடுத்தல்.
- நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் அல்லது நிதிக் குத்தகை ஏற்பாட்டின் கீழ் உபகரணமொன்றை மீட்டெடுப்பதற்கு உரித்துடையவராகவுள்ள குத்தகைக்கு விடுபவர்,
அ. உபகரணங்கள் காணப்படும் பகுதிக்கான பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரிக்கு அத்தகைய உரிமையை தெரிவிக்கலாம்;
ஆ. அவ்வுரிமை நடவடிக்கையில் அமைதியை மீறுதலைத் தடுப்பதற்கு அப்பொலிஸ் நிலையத்தின் பொலிஸ் அதிகாரியின் உதவியைப் பெறலாம்;
இ. உபகரணங்கள் வைத்திருக்கும் நபரிடமிருந்து எதிர்ப்பின்றி அல்லது எந்தவொர நபரிடமிருந்து எதிர்ப்பின்றி உடமையைப் பெற முடியுமாயின், உபகரணங்கள் கிடைத்த இடத்திலிருந்து மீட்டெடுக்கலாம். - குத்தகைக்கு விடுபவர் நிதி குத்தகைக்குவிடும் சட்டத்தின் 27ஆம் பிரிவின் கீழ் உபகரணமொன்றை மீட்டெடுப்பதற்கு தவறுகின்றவிடத்து அல்லது அப்பிரிவின் கீழ் உடமையைப் பெற்றுக்கொள்வதற்கு பொருத்தமற்றதென நம்புவதற்கான நியாயமான காரணங்களை குத்தகைக்கு விடுபவர் கொண்டிருக்கின்றவிடத்து, குத்தகைக்கு விடுபவர் உபகரணத்தை வைத்திருப்பதற்கான உத்தரவிற்கு நிதிக் குத்தகைக்கு உட்படுத்தப்பட்ட மாவட்ட நீதிமன்றத்திற்கு விண்ணப்பமொன்றை மேற்கொள்ளலாம்.
நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தில் நிதிக் குத்தகையின் கீழ் நிலுவையிலுள்ள பணத்தை மீட்டெடுப்பதற்கான ஏற்பாடுகள் யாவை?
நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் 29ஆம் பிரிவானது நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் 28ஆம் பிரிவின் கீழ் உடமைகளை மீட்டெடுப்பதற்கான விண்ணப்பத்தை வழங்குமாயின், குத்தகைக்கு விடுபவர் உடமைக்கான உத்தரவிற்கு வேண்டுவதற்கு மேலதிகமாக, நிதிக் குத்தகையின் கீழ் நிலுவையிலுள்ள பணத்தை மீட்டெடுப்பதற்கான உத்தரவுக்காகவும் வேண்டலாம்.
நிதிக் குத்தகைக்கும் ஈட்டுக்கடனுக்குமிடையிலான வேறுபாடு யாது?
நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் மற்றும் அதன்கீழ் வழங்கப்பட்ட பணிப்புரைகளின் ஏற்பாடுகளுக்கமைவாக, நிதிக் குத்தகை கைச்சாத்திடும் அதேவேளை, ஈட்டுக்கடன் சட்டத்தின் கீழ் (அத்தியாயம் 98) வாகனத்தின் ஈட்டுக்கடனானது நிறைவேற்றப்படுகின்றது. அசையும் சொத்தின் அடமானத்திற்கு ஈட்டுக்கடன் சட்டம் வழங்குகின்றது. இங்கு வாகனம் நிதிக்குத்தகை கம்பனிக்கு அடகுவைக்கப்படலாம நிதிக் குத்தகைவிடும் சட்டத்தின் பிரிவு 27 அல்லது 28இன் கீழ் நிதிக்குத்தகையின் கீழ் வாகன உடமை மேற்கொள்ளப்படுகின்ற அதேவேளை, அடைமானம் பெறுநர் மற்றும் அடைமானம் தருபவருக்கிடையில் உடன்படிக்கையின் நியதி மற்றும் நிபந்தனைகளுக்கமைவாக, அடகுவைக்கப்பட்ட வாகன உடமை ஈட்டுக்கடன் சட்டத்தினால் மேற்கொள்ளப்படுகின்றது. நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் மீள்உடமையாக்கப்பட்ட வாகனம் குத்தகைக்கு பெறுபவர் விற்பனை செய்கின்ற அதேவேளை, ஈட்டுக்கடன் சட்டத்தின் 85ஆம் பிரிவிற்கமைவாக, அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன முகவராண்மை மாத்திரம் அசையும் சொத்தை விற்பனை செய்யலாம். அத்தகைய கொடுகடன் முகவராண்மையின் உடமை மற்றும் கட்டுக்காவலில் இருக்கலாம்.
ஈடுவைப்பதற்கும் தங்கக்கடனுக்குமிடையிலான வேறுபாடு யாது?
1942ஆம் ஆண்டின் 13ஆம் இலக்க அடகுதரகர்கள் கட்டளைச் சட்டத்தின் கீழ் அடகுவைத்தலானது மேற்கொள்ளப்படுகின்றதுடன் தங்கக் கடனானது ஈட்டுக்கடன் சட்டத்தின் கீழ் தங்கத்திற்கான ஈட்டினை உருவாக்கி வழங்கப்பட்ட கடன்களாகும். இது ஈட்டுக்கடன் சட்டத்தின் நோக்கங்களுக்கு அசையும் சொத்தாக கருதப்படுகின்றது. அடகுத்தரகர்கள் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகள் அடகுதரகுச் செயன்முறை கொடுக்கல்வாங்கலுக்கு பயன்படுத்துகின்ற அதேவேளை, ஈட்டுக்கடன் சட்டத்தின் ஏற்பாடு தங்கக்கடன் கொடுக்கல்வாங்கலுக்கு பயன்படுத்தப்படுகின்றது. அடகுதரகுச் செயன்முறை தொழிலில் ஈடுபட்டுள்ள நபர் என்றரீதியில், அந்நபர் தொழிற்படுகின்ற தொடர்புடைய பிரதேச செயலகத்திலிருந்து உரிமத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டும். எனினும், அடமானம் பெறுபவரின் உடமையில் தங்கத்தை விற்பனை செய்கையில், அத்தகைய அடமானத்தைப் பெறுபவர் அதிகாரமளிக்கப்பட்ட கொடுகடன் முகவராண்மையொன்றாக இருக்க வேண்டும் (ஈட்டுக்கடன் சட்டத்தின் 85ஆம் பிரிவு).
கடன் மீதியை குறைக்கின்ற மற்றும் நேர் வீதத்தில் வட்டி அறவிடுதல் ஆகியவற்றை அடிப்படையாகக்கொண்டு வட்டி அறவிடுவதற்கிடையிலான வேறுபாடு யாது?
ஒவ்வொரு மீள்கொடுப்பனவு காலத்திலும் (வழக்கமாக மாதாந்த அடிப்படையில்) கடனின் எஞ்சியுள்ள மூலதன நிலுவையில் குறைக்கும் இருப்பு வட்டி விதிக்கப்படும் அதேவேளையில், நேர்கோட்டு வீதமானது கடனில் விதிக்கப்படுகின்றது (மூலதனத் தொகை). வட்டி உயர்ந்தளவில் இருப்பதால், வாடிக்கையாளரிடமிருந்து அறவிடப்படும் தொகையை கணக்கிடுவது ஒத்த வீத வட்டி இலகுவாக காணப்படுகின்றது (உயர்ந்தளவான பயனுள்ள வட்டி வீதம்). இருப்பு விதத்தைக் குறைப்பதன் கீழ், வாடிக்கையாளரிடமிருந்து அறவிடப்படும் தொகை ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளதுடன், மொத்த தவணை வருடாந்த சூத்திரத்தைப் பயன்படுத்தி கணக்கிடப்படுகின்றது.
உதாரணம், ஆண்டொன்றுக்கு 10%கொண்ட நேர்கோட்டு வட்டி வீதத்துடன் ரூ.100,000 கொண்ட கடனுக்கு ரூ.833.33 கொண்ட வட்டி வீதமொன்ற அறிவிடப்படும் (100,000* 10% /12) அத்துடன் ஒவ்வொரு மாதத்திற்கு ரூ.8,333.33 கொண்ட மூலதனக் கொடுப்பனவு (ரூ.10,000 கொண்ட மொத்த வட்டி அறவிடப்படும்
தவணை | முதன்மை | வட்டி | வௌிநின்ற நிலுவை | |
1 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 91,666.67 |
2 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 83,333.34 |
3 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 75,000.01 |
4 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 66,666.68 |
5 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 58,333.35 |
6 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 50,000.02 |
7 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 41,666.69 |
8 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 33,333.36 |
9 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 25,000.03 |
10 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 16,666.70 |
11 | 9,166.33 | 8,333.33 | 833.33 | 8,333.37 |
12 | 9,166.33 | 8,333.37 | 833.34 | 0.00 |
ஆண்டிற்கு 10% கொண்ட குறைக்கும் வட்டி வீதத்துடன் 1 ஆண்டிற்கு ரூ.100,000 கொண்ட கடனில் ஒவ்வொரு தவணையின் மூலதனப் பகுதியும் அதிகரிக்கும் அதேவேளை வட்டி வீதம் குறையும். நேர்கோட்டு வீத முறையின் கீழ் அறவிடப்படும் ரூ.10,000 உடன் ஒப்பிடுகையில் இம்முறையின் கீழ் அறவிடப்படும் மொத்த வட்டி ரூ.5,499.06 ஆக காணப்படுகின்றது.
தவணை | முதன்மை | வட்டி | வௌிநின்ற நிலுவை | |
1 | 8,791.59 | 7,958.26 | 833.33 | 92,041.74 |
2 | 8,791.59 | 8,024.57 | 767.01 | 84,017.17 |
3 | 8,791.59 | 8,091.45 | 700.14 | 75,925.72 |
4 | 8,791.59 | 8,158.87 | 632.71 | 67,766.85 |
5 | 8,791.59 | 8,226.86 | 564.72 | 59,539.99 |
6 | 8,791.59 | 8,295.42 | 496.17 | 51,244.56 |
7 | 8,791.59 | 8,364.55 | 427.04 | 42,880.01 |
8 | 8,791.59 | 8,434.26 | 357.33 | 34,445.76 |
9 | 8,791.59 | 8,504.54 | 287.05 | 25,941.22 |
10 | 8,791.59 | 8,575.41 | 216.18 | 17,365.80 |
11 | 8,791.59 | 8,646.87 | 144.72 | 8,718.93 |
12 | 8,791.59 | 8,718.93 | 72.66 | 0.00 |
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற நிதிக் கம்பனியில் வைப்பிலிடுவதற்கு உயர்ந்தபட்சமாக எவ்வளவு தொகை ஈடுசெய்யப்படுகின்றது?
உரிமம்பெற்ற நிதிக் கம்பனியொன்றின் மூலம், நபரொருவரால் மேற்கொள்ளப்படும் ரூ.1.1 மில்லியன் கொண்ட தகைமையுடைய வைப்புக்கள் மேலே குறிப்பிடப்பட்ட திட்டத்தின் கீழ் உள்ளடங்குகின்றது.
உதாரணமாக, ரூ.1.5 மில்லியன் மற்றும் ரூ.0.5 மில்லியனாக இரு உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகளில் வைப்பிலிட்டுள்ள நபர் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் முறையே ரூ.1.1 மில்லியன் மற்றும் ரூ.0.5 மில்லியனைக் கோருவதற்கு தகைமையுடையவராவார்.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் கீழ் கூட்டு வைப்புத்தொகை உடமையாளர்களுக்கு செலுத்தப்படும் கொடுப்பனவு யாது?
கூட்டு வைப்பாளர்களின் விடயத்தில், அனைத்து கூட்டு வைப்பாளர்களுக்கும் உரிமம்பெற்ற நிதிக் கம்பனியின் மூலம் மேற்கொள்ளப்படும் தகைமையுடைய வைப்புக்களில் ரூ.1.1 மில்லியன் வரை ஈடுசெய்யப்படுகின்றது.
உதாரணமாக, உரிமம்பெற்ற நிதிக் குத்தகை கம்பனியில் ரூ.2.5 மில்லியன் கொண்ட வைப்பினை மேற்கொண்டுள்ள இரு கூட்டு வைப்பாளர்கள், பொறுப்பாணையில் குறித்துரைக்கப்பட்ட விகிதாசாரத்தினுள் வைப்பாளரொருவருக்கு ரூ.1.1 மில்லியன் வரையான உயர்ந்தபட்ச தொகையை கோருவதற்கு தகைமையுடையவர்களாவார்.
இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் உறுப்பினர்களாக உரிமம்பெற்ற நுண்பாகநிதிக் கம்பனிகள் காணப்படுகின்றனவா?
உரிமம்பெற்ற நுண்பாகநிதிக் கம்பனிகள் இலங்கை வைப்புக் காப்புறுதி மற்றும் திரவத்தன்மை ஆதரவுத் திட்டத்தின் உறுப்பினர்களாக காணப்படுவதில்லை.
அதிகாரமளிக்கப்படாத நிதித்தொழில்
பொது மக்களிடமிருந்து வைப்புக்களை ஏற்பதற்கு யாருக்கு அதிகாரமுள்ளது?
இலங்கை மத்திய வங்கியானது பொது மக்களிடமிருந்து வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்வது மற்றும் கடன் வழங்குதல் அத்துடன்/அல்லது பணத்தை முதலீடு செய்தல் போன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பின்வரும் நிறுவனங்களுக்கு அதிகாரத்தை வழங்கியுள்ளது.
- உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள்
- உரிமம்பெற்ற சிறப்பியல்புவாய்ந்த வங்கிகள்
- உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள்
இதற்கு மேலதிகமாக, தற்போது நடைமுறையிலுள்ள எந்தவொரு எழுத்துமூலச் சட்டத்தின் மூலமாகவும் இச்சட்டத்தின் ஏற்புடைய தன்மையிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிறுவனங்கள்
உதாரணம்: மாகாண சபை சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட கூட்டுறவு சங்கங்கள், நுண்நிதிச் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற நிறுவனங்கள், சுபீட்ச மற்றும் வேளாண்மை அபிவிருத்திச் சட்டங்களின் கீழ் உருவாக்கப்பட்ட கட்டமைப்புக்கள், 1988ஆம் ஆண்டின் 30ஆம் இலக்க வங்கித்தொழில் சட்டத்தின் கீழ் விலக்களிப்பட்ட நிறுவனங்கள் (உதாரணம்: கட்டிட சங்கம் போன்றனவாகும்).
இவ் அதிகாரமளிக்கப்படாத நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்களுக்கு எதிராக ஏதேனும் சட்டம் உள்ளதா?
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்திற்கமைவா, இலங்கை மத்திய வங்கியின் உரிமமின்றி நிதித்தொழிலை கொண்டுநடாத்தி வைப்புக்களை ஏற்றுக்கொள்வது குற்றமாகும்.
இதற்கமைய, இச்சட்டத்தின் கீழ் நிதித்தொழிலை கொண்டுநடாத்துவதற்கு உரிமம்பெற்ற நபர் அல்லது 3ஆம் பிரிவின் நியதிகளுக்கமைவாக இச்சட்டத்தின் ஏற்பாடுகளின் பயன்பாட்டிலிருந்து விலக்களிப்பட்ட நபர் தவிர வேறு யாரும் நிதித் தொழிலை மேற்கொள்ளவோ அல்லது வைப்புக்களை ஏற்றுக்கொள்ளவோ கூடாது.
இவ் அதிகாரமளிக்கப்படாத நிதியியல் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்களிடம் பணத்தை வைப்பிலிடுவதன் இடர்நேர்வு யாது?
அதிகாரமளிக்கப்படாத வைப்புத்தொகையை ஏற்றுக்கொள்ளும் நிறுவனங்கள் மற்றும் தனிப்பட்டவர்கள் பெரும்பாலும் சட்டவிரோதமான தொழிலில் ஈடுபடுகின்றனர். இதனால் வைப்பாளர்கள் தேவையற்ற வழக்குகளில் ஈடுபடுகின்றனர்.
அதிகாரமளிக்கப்படாத நிதியியல் நிறுவனங்களின் நடவடிக்கைகள் இலங்கை மத்திய வங்கியினால் முடக்கப்படும் போது/தடைசெய்யப்படும் போது வைப்பாளர்கள் தற்காலிகமாக தமது வைப்புத்தொகைகளை நிறுத்திவைப்பதன் காரணமாக நிதியியல் பிரச்சனைகளில் முகங்கொடுக்க நேரிடலாம்.
பொறுப்பான தரப்பினரின் மரணம் சம்பவிக்கும் சந்தர்ப்பத்தில் அல்லது அவர் நாட்டை விட்டு வெளியேறும் சந்தர்ப்பத்தில், வைப்பாளர்கள் தமது பணத்தை மீட்பதற்கு பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர்.
அதிகாரமளிக்கப்படாத நிதித் தொழில்களை முன்னெடுப்பதில் ஏற்படும் விளைவுகள் யாது?
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் இலங்கை மத்திய வங்கியினால் நடாத்தப்படும் விசாரணையொன்றை மேற்கொள்ள வேண்டும், அத்தரப்பினர்களின் அனைத்து தொழில் நடவடிக்கைகளையும் தடைசெய்தல், சொத்துக்களின் மாற்றல் மற்றும் விற்பனையை தடைசெய்தல், வெளிநாட்டு பயணத்தை தடைசெய்தல் அதேபோன்று விசாரணையின் இறுதியில் உயர்நீதி மன்றத்தில் விசாரணை, கடூழிய சிறைதண்டணை அல்லது தண்டங்கள் அல்லது இரண்டும் விதிக்கப்பட்ட பின்னர் தொடர்புடைய தரப்பினர் இலங்கை மத்திய வங்கியினால் குற்றவாளியென தீர்மானிக்கப்படுகின்றது.
மேலும், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் அதிகாரமின்றி இயங்கும் அதிகாரமளிக்கப்பட்ட நிதித்தொழிலில் முதலீடொன்றை மேற்கொள்கின்ற நபரொருவர், 2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படுகின்ற இடர்நேர்வை எதிர்கொள்கின்றார்.