நாணயக் கொள்கை மீளாய்வு - 2016 சனவரி

விரிந்த பண நிரம்பலானது ஆண்டிற்காண்டு (M2b) அடிப்படையில் முன்னைய மாதத்தில் காணப்பட்ட 17.00 சதவீதம் கொண்ட வளர்ச்சியைத் தொடர்ந்து 2015 நவெம்பரில் 17.2 சதவீதம் கொண்ட உயர்நத் வீதத்தில் விரிவடைந்தது. 2015 நவெம்பரில் வங்கித் தொழில் துறையின் தேறிய வெளிநாட்டுச் சொத்துக்கள் 2015 ஒத்தோபர் 27ஆம் நாள் வெளியிடப்பட்ட ஐ.அ.டொலர் 1.5 பில்லியன் கொண்ட நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் பெறுகைகள் பெறப்பட்டதுடன் மேம்பட்டன. நாட்டிற்கான பன்னாட்டு முறிகளின் வழங்கலும் நவெம்பர் மாதத்தில் வங்கித் தொழில் துறையிலிருந்து அரசினால் பெறப்பட்ட தேறிய கொடுகடனில் ஏற்பட்ட குறைப்பிற்கு வசதியளித்த வேளையில் அரசாங்கக் கூட்டுத்தாபனங்களினால் பெறப்பட்ட கொடுகடனும் வீழ்ச்சியடைந்தது. அதேவேளையில், வர்த்தக வங்கிகளினால் தனியார் துறையினருக்கு வழங்கப்பட்ட கொடுகடன் விரிந்த பணத்தின் வளர்ச்சிக்கு முக்கிய தூண்டுதலாக அமைந்து ஒத்தோபரின் 26.3 சதவீதம் கொண்ட வளர்ச்சியுடன் ஒப்பிடுகையில், 2015 நவெம்பரில் 27.0 சதவீதம் (ஆண்டிற்கு ஆண்டு) கொண்டதொரு அதிகரிப்பினைப் பதிவுசெய்தது. உண்மையான நியதிகளில், தனியார் துறைக் கொடுகடனில் ஏற்பட்ட மாதாந்த அதிகரிப்பு ரூ. 91.2 பில்லியனாக அமைந்து 2015இன் முதல் பதினொரு மாத காலப் பகுதியில் தனியார் துறைக் கொடுகடனின் ஒன்றுசேர்ந்த விரிவாக்கம் ரூ.647.7 பில்லியனாக அதிகரிப்பதற்கு வழியமைத்தது. 

மிகையான கொடுகடன் உருவாக்கத்தின் மூலம் பணவீக்கத்தின் மீது கட்டியெழுப்பப்படக்கூடிய கேள்வி அழுத்தத்தினைக் கட்டுப்படுத்தும் பொருட்டு, மத்திய வங்கியானது வர்த்தக வங்கிகளின் அனைத்து ரூபா வைப்புப் பொறுப்புக்களின் மீதும் பிரயோகிக்கத்தக்க நியதி ஒதுக்கு விகிதத்தினை 2016 சனவரி 16இலிருந்து நடைமுறைக்கு வரும் விதத்தில் 7.50 சதவீதத்திற்கு 1.50 சதவீதப் புள்ளிகளினால் அதிகரித்தது. இதன்படி, உள்நாட்டுப் பணச் சந்தையில் 2015 திசெம்பரிலும் 2016 சனவரி முதல் இரண்டு கிழமைகளிலும் சராசரியாக ஏறத்தாள ரூ.90 பில்லியனாக விளங்கிய மிகையான ரூபா திரவத்தன்மை அதன் பின்னர் சராசரியாக ஏறத்தாள ரூ.42 பில்லியனுக்கு வீழ்ச்சியடைந்தது. நியதி ஒதுக்கு விகிதத்தில் செய்யப்பட்ட அதிகரிப்பும் சந்தை வட்டி வீதங்களில் மேல்நோக்கிய சீராக்கத்தினை தூண்டியதுடன், வர்த்தக வங்கிகளினால் தனியார் துறைக்கு வழங்கப்பட்ட கொடுகடன் வளர்ச்சியும் காலங்கடந்தேனும் எதிர்வரும் காலத்தில் வீழ்ச்சியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

விரிந்த பணம் உயர்நத் வளர்ச்சியைக் கொண்டிருந்தபோதும் தாழ்ந்த பன்னாட்டு பண்ட விலைகள் மற்றும் பரந்தளவான சாதகமான உள்நாட்டு வழங்கல் நிலைமைகள் என்பனவற்றின் உதவியுடன் பணவீக்கம் குறைந்தளவிலேயே காணப்பட்டது. முதன்மைப் பணவீக்கத்தினை அடிப்படையாகக் கொண்ட கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் (2006/2007=100) ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், 2015 நவெம்பரின் 3.1 சதவீதத்திலிருந்து 2015 திசெம்பரில் 2.8 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன், ஆண்டுச் சராசரி முதன்மைப் பணவீக்கம் 0.9 சதவீதமாகக் காணப்பட்டது. தேசிய நுகர்வோர் விலைச் சுட்டெண்ணினை (2013 = 100) அடிப்படையாகக் கொண்ட முதன்மைப் பணவீக்கம் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில், முன்னைய மாதத்தின் 4.8 சதவீதத்திலிருந்து 2015 திசெம்பரின் 4.2 சதவீதத்திற்கு வீழ்ச்சியடைந்ததுடன், ஆண்டுச் சராசரி அடிப்படையில் 3.8 சதவீதம் கொண்ட பெறுமதியினைப் பதிவு செய்தது. மையப் பணவீக்கத்தினை அடிப்படையாகக் கொண்டிருந்த கொழும்பு நுகர்வோர் விலைச் சுட்டெண் ஆண்டிற்கு ஆண்டு அடிப்படையில் முன்னைய மாதத்தின் 4.3 சதவீதத்துடன் ஒப்பிடுகையில் 2015 திசெம்பரில் உயர்வடைந்து 4.5 சதவீதத்தினைப் பதிவு செய்தது.   

வெளிநாட்டுத் துறையில், 2015 நவெம்பரில் ஏற்றுமதி வருவாய்கள் 9.3 சதவீதத்தினால் சுருக்கமடைந்து ஆண்டின் முதல் பதினொரு மாதகாலப்பகுதியில் 4.4 சதவீதம் கொண்ட ஒன்றுசேர்ந்த வீழ்ச்சிக்குக் காரணமாகியது. இறக்குமதிச் செலவினமும் 2015 நவெம்பரில் 11 சதவீதம் கொண்ட வீழ்ச்சியைப் பதிவு செய்ததுடன் 2015இன் முதல் பதினொரு மாதகாலப்பகுதியில் இறக்குமதிகள் மீதான செலவினத்தில் ஏற்பட்ட ஒன்றுசேர்ந்த வீழ்ச்சி 2.1 சதவீதமாகக் காணப்பட்டது. இவ்வபிவிருத்தியினைப் பிரதிபலிக்கின்ற விதத்தில் வர்த்தகக் கணக்கில் ஏற்பட்ட பற்றாக்குறை 2015 நவெம்பரில் தொடர்ந்து ஐந்தாவது மாதமாகச் சுருக்கமடைந்தது. இருப்பினும், ஒன்றுசேர்ந்த அடிப்படையில், ஆண்டின் முதல் பதினொரு மாத காலப்பகுதியில் வர்த்தகப் பறற்hக்குறை ஐ.அ.டொலர் 7,566 மில்லியனுக்கு 1.0 சதவீதத்தினால் சிறிதளவில் விரிவடைந்தது. சுற்றுலாவிலிருந்தான வருவாய்கள் 2015ஆம் ஆண்டுப் பகுதியில் 17.8 சதவீதத்தினால் அதிகரித்திருபப் தாக மதிப்பிடப்பட்ட போதும், தொழிலாளர் பணவனுப்பல்கள் இவ்வாண்டுப் பகுதியில் 0.5 சதவீதத்தினால் வீழ்ச்சியடைந்து மத்திய கிழக்கிலிருந்தான பெறுகைகள் வீழ்ச்சியடைந்தமையினைப் பிரதிபலித்தது. மொத்த அலுவல்சார் ஒதுக்குகள் 2015 இறுதியில் ஐ.அ.டொலர் 7.3 பில்லியனாக மதிப்பிடப்பட்ட வேளையில், 2015இல் ஐ.அ.டொலருக்கெதிராக 9.0 சதவீதத்தினால் தேய்வடைந்த இலங்கை ரூபா, 2016இன் இன்றுவரையான காலப்பகுதியில் சிறிதளவு உயர்வினைப் பதிவு செய்துள்ளது.   

2016 சனவரி 25இல் நடைபெற்ற நாணயச் சபையின் கூட்டத்தில், அது, நாணய மற்றும் வெளிநாட்டுத் துறைகளின் மீது செய்யப்பட்ட கொள்கை சீராக்கங்கள் பேரண்டப் பொருளாதாரத்திற்கு இன்னமும் படிப்படியாக பரிமாற்றப்பட்டு வருகின்றமையினை அவதானித்ததுடன், இதன்படி இலங்கை மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும் துணைநில் கடன் வழங்கல் வசதிவீதத்தினையும் மாற்றமின்றி முறையே 6.00 சதவீதத்திலும் 7.50 சதவீதத்திலும் பேணுவதற்கு தீர்மானித்தது.

கொள்கைத் தீர்மானம்: கொள்கை வீதங்கள் மாற்றமடையவில்லை   
துணைநில் வைப்பு வசதி வீதம் 6.00%
துணைநில் கடன் வழங்கல் வசதி வீதம் 7.50%
நியதி ஒதுக்கு விகிதம் 7.50%

 

 

 

 

 

 

Published Date: 

Monday, January 25, 2016