பிரதேச அலுவலகம் - மாத்தளை
இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்த "பற்றிக் உற்பத்தி" பற்றிய தொழில்நுட்ப பரிமாற்ற பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் இலங்கை மத்திய வங்கியின் பிரதேச அலுவலகம் - மாத்தளை வளாகத்தில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. 2018 நவம்பர் 5 ஆம் திகதியிலிருந்து மாத்தளை மாவட்டத்திலுள்ள 30 தொழில்முயற்சியாளர்கள் பங்களிப்புடன் 2018 ஆம் நவம்பர் 16 ஆம் திகதி வரை 5 நாட்கள் நடத்தப்பட்டது.
இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேசஅலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "நிதியியல் வாடிக்கையாளர் பாதுகாப்பு கட்டமைப்பு" பற்றிய விழிப்புணர்வு நிகழ்ச்சித்திட்டம், இலங்கை மத்திய வங்கியின் வங்கியல்லா நிதி நிறுவனங்களின் மேற்பார்வைத் திணைக்களத்தின் கூட்டிணைப்புடன் இலங்கை மத்திய வங்கியின் மத்தளை பிரதேச அலுவகத்தின் கேட்போர்கூடத்தில் 2018 நவம்பர் 24ஆம் திகதி நடைபெற்றது. இதில் வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களிலிருந்து 90 அலுவலர்கள் பங்குபற்றினர்.
இலங்கை மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட "அத்வெலா'' வர்த்தக கண்காட்சி மற்றும் சந்தை விரிவாக்க நிகழ்ச்சித்திட்டம் 2018 நவெம்பர் 23 ஆம் மற்றும் 24 ஆம் திகதிகளில் மத்திய வங்கியின் மாத்தளை பிரதேச அலுவலகத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது. இதில் மாத்தளை மற்றும் கண்டி மாவட்டங்களிலுள்ள 60 தொழில்முயற்சியாளர்கள் பங்குபற்றினர்.
இப்பிரதேசத்திலுள்ள மக்களின் வறுமையை ஒழித்து வருமான உருவாக்கத்தினை அதிகரித்தல் நோக்குடன் 2020 சனவரி 17, 18 மற்றும் 19 திகதிகளில் ரத்தோட்ட சனசமூக நிலையத்தில் தூரிகைகளைத் தயாரித்தல் மற்றும் சந்தை வசதி இணைப்புக்களை ஏற்படுத்தல் மீதான பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்று வெற்றிகரமாக நடாத்தப்பட்டது. குறைந்த வருமானத்தைப் பெறுகின்ற 25 பேர் இந்நிகழ்ச்சித்திட்டத்தில் பங்கேற்றனர். லங்காரறட் இன்ரந~னல் (பிறைவேற்) லிமிடெட் பன்னாட்டு ஏற்றுமதித் தரத்தினைப் பூர்த்தி செய்கின்ற விதத்தில் தயாரிக்கப்பட்ட தூரிகைகளைக் கொள்வனவு செய்வதற்கு இணங்கியிருக்கிறது. ஏனைய தூரிகைகளை உள்நாட்டுச் சந்தையில் விற்பனை செய்யமுடியும். இலங்கை மத்திய வங்கியின் மாத்தளைப் பிரதேச அலுவலகமும் தென்னை அபிவிருத்தி அதிகாரசபையும் இணைந்து இந்நிகழ்ச்சித்திட்டத்தினை ஒழுங்கு செய்திருந்தன.