உள்ளக மோசடியொன்று பற்றி அண்மையில் வெளிப்படுத்தப்பட்டதனைத் தொடர்ந்து நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி பற்றிய அபிவிருத்திகளை இலங்கை மத்திய வங்கி தொடர்ந்தும் உன்னிப்பாகக் கண்காணித்து வருகின்றது என்பதை பொதுமக்களுக்கு அறிவிக்க விரும்புகின்றது.
இதுவரையிலும் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில் நஷனல் டெவலப்மன்ட் பாங்க் பிஎல்சி குறைந்தபட்ச ஒழுங்குமுறைப்படுத்தல் தேவைப்பாடுகளுக்கு மேலதிகமான மூலதனத்துடனும் திரவத்தன்மை மட்டங்களுடனும் தொடர்ந்தும் இயங்குகின்றது. முக்கியமாக, வாடிக்கையாளர் கணக்குகள் அல்லது வைப்புக்கள் மீது இந்நிகழ்வு எவ்விதத் தாக்கத்தையும் கொண்டிருக்கவில்லை. அவை பாதுகாப்பாகவும் பத்திரமாகவும் உள்ளன.
இலங்கை மத்திய வங்கியானது அவ்வங்கியுடனும் தொடர்புடைய ஆர்வலர்களுடனும் நெருக்கமான அத்துடன் தொடர்ச்சியான ஈடுபாட்டினைப் பேணுகின்றது. வங்கியின் உறுதிப்பாட்டினைப் பாதுகாப்பதற்கும் வைப்பாளர்களின் நலவுரித்துக்களைப் பாதுகாக்கும் பொருட்டு, வேண்டப்படுமெனில் எவையேனும் வழிமுறைகளை மேற்கொள்வதற்கு மத்திய வங்கி தொடர்ந்தும் தயார் நிலையில் உள்ளது.








