அர்ஜூன மகேந்திரன்
முன்னாள் ஆளுநர் (2015-2016)
திரு. லஷ்மன் அர்ஜூன மகேந்திரன் இலங்கை மத்திய வங்கியின் பதின்மூன்றாவது ஆளுநராக 2015 சனவரியில் பதவியேற்றுக் கொண்டதுடன் 2016 யூனில் பதவியிலிருந்து விலகிக் கொண்டார்.
திரு. மகேந்திரன் பொருளியலில் சிறப்பு கலைமானிப் பட்டத்தினையும் (1982) கலைமுதுமானிப் பட்டத்தினையும் (1987) ஐக்கிய இராச்சியத்தின் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பலியோல் கல்லூரியிலிருந்து பெற்றுக் கொண்டார். 1983இல் உயர் பதவி அலுவலராக மத்திய வங்கியில் இணைந்து கொண்ட இவர் தரவு செய்முறைப்படுத்தல் திணைக்களத்தில் முதலில் பணியாற்றினார். 1985இல் பட்டப்பின் படிப்பிற்காக வெளிநாடு சென்ற இவர் நாடு திரும்பியதும் பொருளாதார ஆராய்ச்சித் திணைக்களத்தில் பணியாற்றினார்.
பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவதற்காக அவர் மத்திய வங்கிப் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டிருந்தார். 1995இல் மத்திய வங்கிப் பணியிலிருந்து இராஜினமா செய்த இவர் எஸ் ஜி செக்குறிட்டிசில் ஏசியன் மற்றும் தென்னாசியா என்பனவற்றுக்கான பொருளாதார ஆராய்ச்சித் தலைவர், இலங்கை முதலீட்டுச் சபையின் தலைவர்/ பணிப்பாளர் நாயகம் போன்ற பல்வேறுபட்ட மூத்த பதவிகளை வகித்தவிடத்து யூரோ மணி ஸ்டர்டெஜிக் டிறெக்ட் இன்வெஸ்டரில் முதன்மை நிறைவேற்று அலுவலர் வாழ்நாள் சாதனை விருதுகளை 2003 இலும் முதன்மை பொருளியலாளர் – உபாயகாரர் விருதினை கிறடிட் சுயிஸ் தனியார் வங்கியிலும் பெற்றுக் கொண்டார். இவர் எமிறேட்ஸ் என்பீடி மற்றும் எச்எஸ்பீசி தனியார் வங்கியிலும் முகாமைத்துவப் பணிப்பாளராகவும் முதன்மை முதலீட்டு அலுவலராகவும் பணியாற்றியிருக்கின்றார்.
திரு. மகேந்திரன் சிஎன்பீசி, சிஎன்என் மற்றும் பீபீசி தொலைக்காட்சிகளில் கிரமமான விமர்சகராகவும் விளங்கியதுடன் அவர் சந்தை சார்ந்த ஆழ்ந்த அறிவினை புளூம்பேர்க், த பினான்சியல் ரைம்ஸ், ஏசியன் வோல் ஸ்ட்ரீட் மற்றும் போப்ஸ் சஞ்சிகை என்பனவற்றில் கிரமமாக பகிர்ந்து கொள்ளுமொருவராகவும் காணப்பட்டார்.