ஞாபகார்த்த நாணத் தாள்களும் குத்திகளும்

இலங்கை மத்திய வங்கி இரண்டு வகையான ஞாபகார்த்த நாணயக் குத்திகளை வெளியிட்டிருக்கிறது.

          சுற்றோட்டத்திலுள்ள நியம நாணயக் குத்திகள்
          சுற்றோட்டப்படுத்தப்படாத நியம நாணயக் குத்திகள்

சுற்றோட்டப்படுத்தப்படாத நியம நாணயக் குத்திகள் மாசற்வை, சாதாரணம் மற்றும் சுற்றோட்டப்படாதவை போன்ற சிறப்பு நிபந்தனைகளில் வெளியிடப்பட்டன.

புத்தரின் 2500 ஆண்டு மறைந்த நினைவு  புத்தரின் 2500 ஆண்டு மறைந்த நினைவு  2வது உலக உணவுக் காங்கிரஸ்
 
முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 2
நாணயக்குத்தி ஆண்டு: 1957  உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 500,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1957  உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  11.31 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1968 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 31.50 மி.மீ நிறை:  12.35 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 500,000 pcs
5வது நடுநிலை நாடுகளின் உச்சி மகாநாடு 5வது நடுநிலை நாடுகளின் உச்சி மகாநாடு 1வது நிறைவேற்று ஜனாதிபதி (ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா)
 
முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 2 முகப்புப் பெறுமதி: ரூ. 1
நாணயக்குத்தி ஆண்டு: 1976  உலோகம்: நிக்கல்
விட்டம் அளவு: 32.84 மி.மீ நிறை:  13.60 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 1,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1976 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 30.00 மி.மீ நிறை:  13.50 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1978  உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
1வது நிறைவேற்று ஜனாதிபதி (ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்த்தனா) 50 வருட சர்வதேச வயது வந்தோர் வாக்குரிமை மகாவலி அபிவிருத்தித் திட்டம்
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 2

நாணயக்குத்தி ஆண்டு:

1978 உலோகம்: தங்கம் (22 காரட்)
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  12.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 39 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1981   உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 29.00 / 30.28 மி.மீ நிறை:  9.60 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1981  உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  8.25 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 45,000,000 pcs
வீடுகள் அற்றோருக்கான சர்வதேச வீட்டுடைமை வீடுகள் அற்றோருக்கான சர்வதேச வீட்டுடைமை இலங்கை மத்திய வங்கியின் 40வது ஆண்டு நினைவு 
முகப்புப் பெறுமதி: ரூ. 10 முகப்புப் பெறுமதி: ரூ. 10 முகப்புப் பெறுமதி: ரூ. 500
நாணயக்குத்தி ஆண்டு: 1987 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.00 - 30.00 மி.மீ நிறை:  11.70 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1987 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.00 - 30.10 மி.மீ நிறை:  11.31 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 200 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1990 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: பிறில்லியன்ட் சுற்றோட்டப்படாதது
தொகை: 9,800 pcs
இலங்கை மத்திய வங்கியின் 40வது ஆண்டு நினைவு 5வது தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுக்கள் - கொழும்பு 5வது தெற்காசிய கூட்டமைப்பு விளையாட்டுக்கள் - கொழும்பு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 500 முகப்புப் பெறுமதி: ரூ. 500 முகப்புப் பெறுமதி: ரூ. 100
நாணயக்குத்தி ஆண்டு: 1990 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 200 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1991 உலோகம்: தங்கம் (12 காரட்)
விட்டம் அளவு: 14.00 மி.மீ நிறை:  1.60 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது  தொகை: 8,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1991 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 22.00 - 29.40 மி.மீ நிறை:  10.20 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 20,000 pcs
நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று 3வது வருட நினைவு தினம்- ஆர்.பிரேமதாசா நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று 3வது வருட நினைவு தினம்- ஆர்.பிரேமதாசா நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று 3வது வருட நினைவு தினம்- ஆர்.பிரேமதாசா  
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 1
நாணயக்குத்தி ஆண்டு: 1992 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 25,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1992 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 2,500 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1992 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 2,000 pcs
நிறைவேற்று ஜனாதிபதியாக பதவியேற்று 3வது வருட நினைவு தினம்- ஆர்.பிரேமதாசா 2300ஆவது அனுபுது மிஹிந்து ஜயந்தி உணவு விவசாய அமைப்பின் 50வது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 500 முகப்புப் பெறுமதி: ரூ. 2
நாணயக்குத்தி ஆண்டு: 1992 உலோகம்: தங்கம் (22 காரட்)
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  12.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 100 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1993 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 30,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1995 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  8.25 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 40,000,000 pcs
ஐக்கிய நாடுகள் சபையின் 50வது ஆண்டு நிறைவு ஐக்கிய நாடுகள் சபையின் 50வது ஆண்டு நிறைவு ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு  
 
முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 1
நாணயக்குத்தி ஆண்டு: 1995 உலோகம்: நிக்கல்/ பித்தளை
விட்டம் அளவு: 23.50 மி.மீ நிறை:  9.50 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 50,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1995 உலோகம்: நிக்கல்/ பித்தளை
விட்டம் அளவு: 23.50 மி.மீ நிறை:  9.50 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 5,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1996 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 5,000,000 pcs
இலங்கை மீளச் சுதந்திரம் பெற்றதன் 50வதுஆண்டு நிறைவு இலங்கை மீளச் சுதந்திரம் பெற்றதன் 50வதுஆண்டு நிறைவு இலங்கை மீளச் சுதந்திரம் பெற்றதன் 50வதுஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 5000 முகப்புப் பெறுமதி: ரூ. 1000 முகப்புப் பெறுமதி: ரூ. 10
நாணயக்குத்தி ஆண்டு: 1998 உலோகம்: தங்கம் (22 காரட்)
விட்டம் அளவு: 22.05 மி.மீ நிறை:  7.98 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 5,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1998 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 25,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1998 உலோகம்:

ஈருலோகம்

வெளிவளையம் செப்பு/ நிக்கல்

உள்வட்டம் நிக்கல்/ பித்தளை

விட்டம் அளவு:

வெளிவளையம் 27.0 மி.மீ

உள்வட்டம் 18.0 மி.மீ

நிறை:  9.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 50,000,000 pcs
1996 இல் கிரிக்கெட் உலகக் கோப்பையின் வெற்றி 1996 இல் கிரிக்கெட் உலகக் கோப்பையின் வெற்றி இலங்கைத் தரைப்படையின் 50வது ஆண்டு நிறைவு 
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1000 முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 1
நாணயக்குத்தி ஆண்டு: 1999  உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 25,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1999 உலோகம்: நிக்கல்/ பித்தளை
விட்டம் அளவு: 23.50 மி.மீ நிறை:  9.50 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 50,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 1999  உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 8,000 pcs
இலங்கைத் தரைப்படையின் 50வது ஆண்டு நிறைவு இலங்கை மத்திய வங்கியின் 50வது ஆண்டு நிறைவு இலங்கை கடற்படையின் 50வதுஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 1000 முகப்புப் பெறுமதி: ரூ. 1
நாணயக்குத்தி ஆண்டு: 1999 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: பிறில்லியன்ட் சுற்றோட்டப்படாதது தொகை: 127,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2000 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 10,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2000  உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 2,000 pcs
இலங்கை கடற்படையின் 50வதுஆண்டு நிறைவு இலங்கை விமானப்படையின் 50வது ஆண்டு நிறைவு கொழும்புத் திட்டத்தின் 50வது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 1 முகப்புப் பெறுமதி: ரூ. 2
நாணயக்குத்தி ஆண்டு: 2000 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: பிறில்லியன்ட் சுற்றோட்டப்படாதது தொகை: 20,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2001 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 25.40 மி.மீ நிறை:  7.13 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 2,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2001 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  8.25 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 10,000,000 pcs
(பி.எச்.ஆர்.ஏ.உபாலி நகிமி) 250வது ஆண்டு நிறைவு

சியாமோபசம்படாவவின் (வலிவிற்ற சிறி சர்ணங்கற சங்கராசா மகிமி) 250வது ஆண்டு நிறைவு

புத்தர் மறைந்து 2550வது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 2000
நாணயக்குத்தி ஆண்டு: 2003 உலோகம்: நிக்கல்/ பித்தளை 
விட்டம் அளவு: 23.50 மி.மீ நிறை:  9.50 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 4,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2003 உலோகம்: நிக்கல்/ பித்தளை
விட்டம் அளவு: 23.50 மி.மீ நிறை:  9.50 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 4,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2006 உலோகம்: வெள்ளி(குறிப்பிட்ட இடங்களில் தங்க முலாமிடப்பட்டது)
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 10,000 pcs
புத்தர் மறைந்து 2550வது ஆண்டு நிறைவு புத்தர் மறைந்து 2550வது ஆண்டு நிறைவு உலகக்கிண்ணம் 2007 (இரண்டாம் இடம்) 
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1500 முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 1000
நாணயக்குத்தி ஆண்டு: 2006  உலோகம்: வெள்ளி ( .925) 
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 20,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2006 உலோகம்: Br Plated Steel 
விட்டம் அளவு: 23.50 மி.மீ நிறை:  9.50 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 20,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2007 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 32.00 மி.மீ நிறை:  12.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: பிறில்லியன்ட் சுற்றோட்டப்படாதது தொகை: 10,000 pcs
உலகக்கிண்ணம் 2007 (இரண்டாம் இடம்)  ஊழியர் சேம நிதியத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு ஊழியர் சேம நிதியத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 1000 முகப்புப் பெறுமதி: ரூ. 1000
நாணயக்குத்தி ஆண்டு: 2007  உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  7.70 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 7,860,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2008 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு 
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  7.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: பிறில்லியன்ட் சுற்றோட்டப்படாதது தொகை: 1,200 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2008 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  7.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 100 pcs
ஊழியர் சேம நிதியத்தின் 50ஆவது ஆண்டு நிறைவு இலங்கைச் சுங்கத்தின் இருநூறாவது ஆண்டு நிறைவு இலங்கை தரைப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 2 முகப்புப் பெறுமதி: ரூ. 200 முகப்புப் பெறுமதி: ரூ. 1000
நாணயக்குத்தி ஆண்டு: 2008  உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  7.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2009 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  11.90 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 3,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2009 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  11.90 கிறாம்
நாணயக்குத்தி வகை: பிறில்லியன்ட் சுற்றோட்டப்படாதது தொகை: 10,000 pcs
இலங்கை தரைப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு இலங்கை மத்திய வங்கியின் 60 ஆவது ஆண்டு நிறைவு இலங்கை தரைப்படையின் 60 ஆவது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1000 முகப்புப் பெறுமதி: ரூ. 5000 முகப்புப் பெறுமதி: ரூ. 2
நாணயக்குத்தி ஆண்டு: 2009 உலோகம்: செப்பு/ நிக்கல்
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  8.25 கிறாம்
நாணயக்குத்தி வகை: பிறில்லியன்ட் சுற்றோட்டப்படாதது தொகை: 200,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2010 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 5,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2011 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  7.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 3,000,000 pcs
2600வது சம்புத்தத்வ ஜயந்தி 2600வது சம்புத்தத்வ ஜயந்தி மக்கள் வங்கியின் 50 ஆவது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 1000 முகப்புப் பெறுமதி: ரூ. 10 முகப்புப் பெறுமதி: ரூ. 1000
நாணயக்குத்தி ஆண்டு: 2011 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 2,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2011 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 26.4 மி.மீ நிறை:  8.35 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 1,500,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2011 உலோகம்: தங்க முலாமிடப்பட்ட வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 2,300 pcs
கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் 125 ஆவது ஆண்டு நிறைவு இலங்கை சாரணியத்தின் 100 ஆவது ஆண்டு இலங்கை-ஜப்பான் நட்புறவின் 60 ஆவது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: ரூ. 2000 முகப்புப் பெறுமதி: ரூ. 2 முகப்புப் பெறுமதி: ரூ. 1000
நாணயக்குத்தி ஆண்டு: 2011 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 1,500 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2012 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28.50 மி.மீ நிறை:  7.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2012 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 35.00 மி.மீ நிறை:  20.00 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது(ஒரு பக்கத்தில் வர்ணத்தில் வார்ப்படம் செய்யப்பட்டது) தொகை: 20,000 pcs
ஸ்ரீறிமத் அநாகரிக தர்மபாலவின் 150ஆவது பிறந்த நாள் நினைவு தினம் இலங்கை வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவு கொழும்பு மாநகர சபையின் 150 ஆவது ஆண்டு நிறைவு
முகப்புப் பெறுமதி: ரூ. 500 முகப்புப் பெறுமதி: ரூ. 5 முகப்புப் பெறுமதி: ரூ. 500
நாணயக்குத்தி ஆண்டு: 2014 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 1,500 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2014 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 23.50 மி.மீ நிறை:  7.70 கிறாம்
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2015 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:  28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 1,000 pcs
தவத்திரு புனித போப்பாண்டவர் பிரான்சிஸ் இலங்கைக்கு விஜயம் செய்தமை கொழும்பு 05 விசாகா வித்தியாலயத்தின் 100ஆவது ஆண்டு நிறைவு இலங்கைத் தேயிலையின் 150 ஆவது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: Rs. 500 முகப்புப் பெறுமதி: Rs. 2000  முகப்புப் பெறுமதி: Rs. 10
நாணயக்குத்தி ஆண்டு: 2015 உலோகம்: வெள்ளி
விட்டம் அளவு: 38.61 மி.மீ  நிறை:  28.28 கிறாம் 
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 1,500 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2017 உலோகம்: வெள்ளி, விளக்கு தங்கத்தில் முலாமிடப்பட்டது 
விட்டம் அளவு: 38.61 மி.மீ  நிறை: 28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 1,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2017 உலோகம்: துருப்பிடிக்காத உருக்கு 
விட்டம் அளவு: 26.4 மி.மீ நிறை:  
 நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம்  தொகை: 5,000,000 pcs
இலங்கை சமிக்ஞைப் படையணியின் 75 ஆவது ஆண்டு நிறைவு இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவு இலங்கை மத்திய வங்கியின் 70 ஆவது ஆண்டு நிறைவு
 
முகப்புப் பெறுமதி: Rs. 10 முகப்புப் பெறுமதி: Rs. 20 முகப்புப் பெறுமதி: Rs. 20
நாணயக்குத்தி ஆண்டு: 2018 உலோகம்: துருப்பிடிக்காத உருக்கு
விட்டம் அளவு: 26.4 மி.மீ நிறை  
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 5,000,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2020 உலோகம்: அலுமினிய வெண்கலம் 
விட்டம் அளவு: 28மி.மீ நிறை:
 
நாணயக்குத்தி வகை: மின்னுகின்ற சுற்றோட்டம்செய்யப்படாதது  தொகை: 3,000 pcs
நாணயக்குத்தி ஆண்டு: 2020 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28மி.மீ நிறை:
 
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 5,000,000 pcs
இலங்கை - சீன இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு விழா இலங்கை - சீன இராஜதந்திர உறவுகளின் 65ஆவது ஆண்டு நிறைவு விழா மற்றும் சீன கம்யூனிஸ்ட் கட்சியின் 100ஆவது ஆண்டு நிறைவு விழா கொழும்பு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா
முகப்புப் பெறுமதி: Rs. 1000 முகப்புப் பெறுமதி: Rs. 1000 முகப்புப் பெறுமதி: Rs. 20
நாணயக்குத்தி ஆண்டு: 2022 உலோகம்: தங்கம் (22 காரட்)
விட்டம் அளவு: 25.4 மி.மீ நிறை:
12.0 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 500 pcs 
நாணயக்குத்தி ஆண்டு: 2022 உலோகம்: வெள்ளி ( .925) 
விட்டம் அளவு: 38.61 மி.மீ நிறை:
28.28 கிறாம்
நாணயக்குத்தி வகை: துருப்பிடிக்காதது தொகை: 2,000 pcs 
நாணயக்குத்தி ஆண்டு: 2020 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28மி.மீ நிறை:
-
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 500,000 pcs
இலங்கையில் குடிசன மற்றும் வீட்டுவசதிகள் தொகைமதிப்பின் 150ஆவது ஆண்டு நிறைவு விழா    
   
முகப்புப் பெறுமதி: Rs. 20    
நாணயக்குத்தி ஆண்டு: 2021 உலோகம்: நிக்கல் முலாமிடப்பட்ட உருக்கு
விட்டம் அளவு: 28மி.மீ நிறை:
-
நாணயக்குத்தி வகை: சுற்றோட்டம் தொகை: 2,000,000 pcs
   
இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட ஞாபகார்த்த நாணயத் தாள்கள்

இலங்கை சுதந்திரமடைந்த 50 ஆவது ஆண்டு நிறைவை குறிக்கும் பொலிமர் நாணயத் தாள்

முகப்புப் பெறுமதி    : Rs. 200             விட்டம் அளவு   : 146.5 x 73 mm              நாணயத் தாள் ஆண்டு: 1998                   அச்சிடப்பட்ட நாணயத்தாள்களின் எண்ணிக்கை:  20,000,000                

நாணயத் தாளின் முன்பக்கம்

"50 ஆண்டுகால சுதந்திரத்தின் போது அடையப்பட்ட முன்னேற்றங்கள்" எனும் தொனிப்பொருளின் கீழ் இலவசக் கல்வி மற்றும் இலவச சுகாதாரப் பணிகளையும், கல்லோயா அபிவிருத்தி செயற்றிட்டத்தையும், மின்வலு அபிவிருத்தியையும், பண்டாரநாயக்க ஞாபகார்த்த பன்னாட்டு மண்டபத்தையும், மகாவெலி அபிவிருத்தி செயற்றிட்டத்தையும், பண்டாரநாயக்க பன்னாட்டு வானூர்தி நிலையத்தினையும், தொலைத்தொடர்பூட்டல் அபிவிருத்தியையும், முதலீட்டு ஊக்குவிப்பு மையத்தையும், ஸ்ரீ ஜெயவர்தனபுர கோட்டையின் புதிய பாராளுமன்றத் கட்டடத்தொகுதியையும், கைத்தொழில் அபிவிருத்தியையும், கொழும்பு நகரம் மற்றும் துறைமுகத்தின் அபிவிருத்தி மற்றும் ஐக்கியம் மற்றும் சமாதானம் என்பவற்றினை நாணயத் தாளின் முன்பக்கம் எடுத்துரைக்கின்றது.

நாணயத் தாளின் பின்பக்கம்

இளவரசன் விஜயனின் வருகை, அரகந்த் மஹிந்தவின் வருகையும் அரசன் தேவநம்பியதீசனின் ஆட்சியின் போது அறிமுகப்படுத்தப்பட்ட பெளத்தமும், துட்டகைமுனு மன்னன் இலங்கையை ஐக்கியப்படுத்தி எதிரி மன்னனான எல்லாளனுக்கு மரியாதை செலுத்தி மகா செய/தூபியை நிர்மாணித்தமை, காசியப்ப மன்னன் சிகிரியாவின் குன்றில் அரண்மனையை கட்டியமையும் சுவரோவியங்களால் அவற்றை அலங்கரித்தமையும், பராக்கிரமபாகு மன்னனால் கட்டப்பட்ட மகா பராக்கிரம சமுத்திரம், போர்த்துகேயர் மற்றும் ஒல்லாந்தரின் இலங்கை படையெடுப்பு மற்றும் பிரித்தானியரின் வெற்றி, கண்டிய மாநாட்டில் வாரியபொல ஸ்ரீ சுமங்கல தேரர் பிரித்தானிய கொடியை இழுத்துக் கீழே போடும் காட்சி போன்ற படங்களின் மூலம் "தேசிய மரபுரிமை" எனும் தொனிப்பொருளை நாணயத் தாளின் பின்பக்கம் எடுத்துரைக்கின்றது.

இலங்கையில் சமாதானம் மற்றும் சுபீட்சத்திற்கான வழிபிறப்பதை குறிக்கும் நாணயத் தாள்

முகப்புப் பெறுமதி    : Rs. 1000             விட்டம் அளவு   : 157 x 78.5 mm              நாணயத் தாள் ஆண்டு: 2009                   அச்சிடப்பட்ட நாணயத்தாள்களின் எண்ணிக்கை:  25,000,000

நாணயத் தாளின் முன்பக்கம்

நாணயத் தாளின் முன்பக்கத்திலிருக்கும் தொனிப்பொருள் யாதெனில் அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையின் கீழ் சுபீட்சத்தை நோக்கிச் செல்கின்ற சௌகன்யம் மிக்க ஒரு நாடு மற்றும் ஒரு தேசம் ஆகும். நாணயத் தாளின் வலதுபக்கத்தில் அதிமேதகு சனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் உருவம் பொறிக்கப்பட்டுள்ளதை முன்பக்கம் எடுத்துரைக்கின்றது. தேசிய சௌகன்யம் மற்றும் சமாதானத்தின் விளைவாக பிராந்திய ஒருமைப்பாட்டினையும் சுபீட்சத்தையும் முறையே எடுத்துக்காட்டுமாறு இடது மத்தியில் உதயசூரியனின் பின்னணியுடன் இலங்கையின் தேசப்படமும் நெற்கதிர்களுடன் "பூரணகலசமும்" பொறிக்கப்பட்டுள்ளது.

நாணயத் தாளின் பின்பக்கம்

தேசத்தின் வெற்றிவாகைசூடிய பாதுகாப்பு படைகளினாலும் பொலிசாரினாலும் வழங்கப்பட்ட அச்சமற்ற பங்களிப்புக்களே நாணயத் தாளின் பின்பக்கத்திலிருக்கும் தொனிப்பொருளாகும். பாதுகாப்பு படைகளினால் ஒன்றுசேர்ந்து தேசியக்கொடி ஏற்றப்பட்டமையை மத்தியிலுள்ள வடிவமைப்பு எடுத்துரைக்கின்றது. பாதுகாப்புப் படைகளின் மனிதாபிமான தொழிற்பாடுகள் திருப்புமுனையாக அமைந்த மாவிலாறு அணைக்கட்டு மற்றும் தொப்பிகலப் பாறை (பாரன் தொப்பி) என்பவற்றின் படங்கள் பின்னணியில் பொறிக்கப்பட்டுள்ளன.

இலங்கையில் நடைபெற்ற பொதுநலவாய அரச தலைவர்களின் கூட்டத்தை குறிக்கும் ஞாபகார்த்த நாணயத் தாள்

முகப்புப் பெறுமதி    : Rs. 500             விட்டம் அளவு   : 143 x 67 mm              நாணயத் தாள் ஆண்டு: 2013                அச்சிடப்பட்ட நாணயத்தாள்களின் எண்ணிக்கை: 5,000,000

நாணயத் தாளின் முன்பக்கம்

ஞாபகார்த்த நாணயத் தாள் ஏற்கனவே சுற்றோட்டத்திலிருக்கும் நாணயத் தாளை ஒத்ததாக காணப்பட்டாலும் ஏற்கனவே காணப்பட்ட வண்ணத்துப்பூச்சிக்குப் பதிலாக பொதுநலவாய அரச தலைவா்களின் கூட்டம் 2013 என்ற இலட்சனையை கொண்டிருந்ததோடு நாணயத் தாளிலுள்ள 2010.01.01 என்ற திகதி 2013.11.15 எனவும் மாற்றப்பட்டுள்ளது. பொதுநலவாய அரச தலைவா்களின் கூட்டம் 2013 நாணயத் தாளிற்காக நிலைக்குத்தான இலக்கத்தினைச் சுற்றி மேலதிக நீரியல் அடையாளமொன்றினை உள்ளடக்கிய வடிவமைப்பொன்று சேர்க்கப்பட்டிருக்கிறது. நாணயத் தாளின் முன்பக்க மத்தியில், கொழும்பில் அமைந்துள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டை கோபுரங்கள் மற்றும் இலங்கை வங்கியின் தலைமை அலுவலகக் கட்டிடம் என்பன எடுத்துக்காட்டப்பட்டுள்ளன. இப்படத்தின் வலதுபக்கத்தில் கண்டியிலுள்ள "இலங்காதிலக்க விகாரை" என அறியப்படும் பௌத்த கோவிலின் படம் காணப்படுகின்றது. நாணயத் தாளின் வலப்புறத்தில் தோன்றும் பறவை இலங்கை மரகதத் தொண்டைக் கழல்கிளி ஆகும்.(லேயர்ட்ஸ் பரகீட் - சிட்டாகுலா கல்த்ரோபி)

நாணயத் தாளின் பின்பக்கம்

நாணயத் தாளின் பின்பக்கம் நிலைக்குத்தாக பார்க்கப்படும் போது, 'தெல்மே நெட்டும' ('டெவொல் மதும' சடங்கு - தாழ்நில நடனப் பாரம்பரியம்) நடனக்கலைஞரதும் 'யக்பெர' மேளகாரரினதும் தோற்றமும் பொறிக்கப்பட்டுள்ளது. ‘பத்மநிதி' காவல் கல் மேலே வலதுபக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. “டிவித்வ லிய வெல” என அழைக்கப்படும் இரட்டை மலர் வடிவமைப்பு வலதுபக்கப் பின்னணியில் மேலிருந்து கீழாக பொறிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் 70ஆவது சுதந்திரத் தினக் கொண்டாட்டத்தை குறிக்கும் ஞாபகார்த்த நாணயத் தாள்

முகப்புப் பெறுமதி    : Rs. 1000             விட்டம் அளவு   : 148 x 67 mm              நாணயத் தாள் ஆண்டு: 2018                அச்சிடப்பட்ட நாணயத்தாள்களின் எண்ணிக்கை: 5,000,000

நாணயத் தாளின் முன்பக்கம்

தற்போது சுற்றோட்டத்திலுள்ள 11ஆவது நாணயத் தாள் தொடரிலுள்ள 1000 ரூபாய் நாணயத் தாளினை ஒத்ததாகக் காணப்படுகின்றதெனினும் பின்வரும் மாற்றங்கள் காணப்படுகின்றன:

  1. தற்போது சுற்றோட்டத்திலுள்ள 11ஆவது நாணயத் தாள் தொடரிலுள்ள 1000 ரூபாயில் காணப்படும் வண்ணத்துப்பூச்சியின் வடிவமைப்பிற்குப் பதிலாக நாணயத் தாளின் கீழ் இடதுபக்க மூலையில் "பல்லினத்தன்மையினைக் கொண்டாடுவோம்” என்ற இலட்சனை பொறிக்கப்பட்டுள்ளது;
  2. தற்போது சுற்றோட்டத்திலுள்ள 11ஆவது நாணயத் தாள் தொடரிலுள்ள 1000 ரூபாயில் காணப்படும் றம்பொட சுரங்கத்திற்குப் பதிலாக பௌத்த கோவில், பள்ளிவாசல், இந்துக்கோவில் மற்றும் தேவாலயம் என்பனவற்றின் தோற்றம் மத்தியில் பொறிக்கப்பட்டுள்ளது;
  3. தற்போதுள்ள தொடரில் முன்னெழுத்தான “S” இற்குப் பதிலாக S70 மாற்றப்பட்டுள்ளது.

நாணயத் தாளின் வலப்புறத்தில் தோன்றும் பறவை இலங்கை தொங்குக் கிளி (லோரிகுலஸ் பெரிலினஸ்) ஆகும்.

நாணயத் தாளின் பின்பக்கம்

நாணயத் தாளின் பின்பக்கத்தில் 'தவுல்/தவுல பெற' மேளம் அடிப்பவரதும் 'மலபதய நெட்டும' (சப்பிரகமுவா நடனப் பாரம்பரிய) நடனக்கலைஞரதும் தோற்றமும் பொறிக்கப்பட்டுள்ளது. காவல் தெய்வங்களுடன் கூடிய காவல் கல் மேலே வலதுபக்கத்தில் பொறிக்கப்பட்டுள்ளது. “டிவித்வ லிய வெல” என அழைக்கப்படும் இரட்டை மலர் வடிவமைப்பு நாணயத் தாளின் வலதுபக்கப் பின்னணியில் பொறிக்கப்பட்டுள்ளது.

இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டுநிறைவைக் குறிக்கும் சுற்றோட்டத்திற்கு விடப்படும் ரூ.2000 ஞாபகார்த்த நாணயத் தாள்

முகப்புப் பெறுமதி    : Rs. 2000             அளவு   : 151 x 67 mm              நாணயத் தாள் ஆண்டு: 2025                அச்சிடப்பட்ட நாணயத் தாள் தொகை: 50,000,000

நாணயத் தாளின் முன்பக்கம்

Tஇலங்கை மத்திய வங்கியின் தலைமை அலுவலகக் கட்டடத்தையும் கொழும்பு வெளிச்சவீட்டு மணிக்கூட்டுக் கோபுரத்துடன் இணைத்து அண்மைய நகர அபிவிருத்தியைக் காண்பிக்கின்ற கொழும்பின் பகட்டான தொடுவானத்தையும்; 75 ஆவது ஆண்டுநிறைவு இலச்சினையையும் கொண்டுள்ளது. பாதுகாப்பை மேம்படுத்துவதற்கும் பொதுமக்கள் அத்தாட்சிப்படுத்தலை வசதிப்படுத்துவதற்கும் நிறம் மாறுகின்ற பாதுகாப்பு நூல் புகுத்தப்பட்டுள்ளது. தொடுகையின் மூலம் நாணயத் தாளை இனங்கண்டுகொள்வதற்கு கட்புலக் குறைபாடு உடையவர்களுக்கு உதவுவதற்கான ஒவ்வொன்றும் வைர வடிவத்துடனான ஆறு உயர்த்தப்பட்ட கட்டங்கள் இடது மற்றும் வலது ஓரங்களின் இரு மருங்கிலும் அச்சிடப்பட்டுள்ளது.

நாணயத் தாளின் பின்பக்கம்

பொருளாதாரத் தாக்குப்பிடிக்கும் தன்மை, முன்னேற்றம் என்பவற்றுக்கான மத்திய வங்கியின் கடமைப்பொறுப்பினை அடையாளப்படுத்தி இலங்கையின் வண்ணமயமான வரைபடம், நீல அல்லி, மத்திய வங்கியின் நோக்கக்கூற்று என்பவற்றை எடுத்துரைக்கின்றது.