நிதி மற்றும் குத்தகைக்குவிடும் கம்பனிகள்
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டம் மற்றும் 2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தினதும் ஏற்பாடுகளின் கீழ் உாிமம்பெற்ற நிதிக் கம்பனிகளையும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளையும் ஒழுங்குமுறைப்படுத்தி மேற்பாா்வை செய்வதற்கான பொறுப்பாணை வங்கியல்லா நிதியியல் நிறுவனங்களின் மேற்பாா்வைத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. உாிமம்பெற்ற நிதிக் கம்பனிகளையும் சிறப்பியல்புவாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளையும் மேற்பார்வை செய்தலானது நியதிச்சட்ட பரீட்சிப்புக்கள் (தளத்திலான பரீட்சிப்பு), தொடர்ச்சியான கண்காணிப்பு (தளத்திற்கு வௌியிலான பரீட்சிப்பு), ஒழுங்குமுறைப்படுத்தல் ஒப்புதல்களை வழங்குதல், பணிப்புரைகள் மற்றும் முன்மதியுடைய தேவைப்பாடுகளை வழங்குதல், வைப்பு ஏற்றல் உள்ளடங்கலாக அதிகாரமளிக்கப்படாத நிதியியல் நடவடிக்கைகளை விசாரணை செய்தல். கொள்கைக் கருமங்கள், அதிகாரமளிக்கப்படாத வைப்புக்கள் மற்றும் முறிவடைந்த நிதியியல் நிறுவனங்கள் தொடா்பிலான பொதுமக்கள் முறைப்பாடுகளையும் திணைக்களம் கையாளுகின்றது.
உரிமம் பெற்ற நிதிக் கம்பனிகள்
2011ஆம் ஆண்டின் 42ஆம் இலக்க நிதித் தொழில் சட்டத்தின் கீழ் உரிமம்பெற்ற கம்பனிகள் நிதித்தொழிலைக் கொண்டு நடாத்துவதற்கு இலங்கை மத்திய வங்கியினால் அதிகாரமளிக்கப்பட்டுள்ளன.
உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள், முன்மதியுடைய தேவைப்பாடுகள் மீது கவனம் செலுத்துகின்ற கண்டிப்பான ஒழுங்குமுறைப்படுத்தல் கட்டமைப்பொன்றின் அடிப்படையில் இலங்கை மத்திய வங்கியின் மேற்பாா்வைக்கும் ஒழுங்குமுறைப்படுத்தலுக்கும் உட்பட்டுள்ளன.
முன்மதியுடைய தேவைப்படுத்தல்களுடன் ஏதேனும் இணக்கமற்ற நிகழ்வில் தண்டப்பணங்கள், தொழில் மட்டுப்பாடுகள், வைப்புக்களை மீளக் கொடுப்பனவு செய்தல், உாிமத்தை இரத்துச்செய்தல், ஏடுகள் பற்றிய மேலதிக விசாரணைகள் போன்ற அவசியமான சீராக்க நடவடிக்கைகளை எடுப்பதற்கு இலங்கை மத்திய வங்கிக்கு அதிகாரமளிக்கின்றது.
இலங்கையின் உாிமம்பெற்ற நிதிக் கம்பனிகளின் பட்டியல்
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள்
2000ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் நிதிக் குத்தகைக்குவிடும் தொழிலில் ஈடுபடுவதற்கு பதவுசெய்யப்பட்ட கம்பனிகளாகும்.
நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட நிதிக் குத்தகைக்குவிடும் தாபனங்களாக பதிவுசெய்யப்படுவதற்கு நான்கு வகையான நிறுவனங்கள் தகைமை பெற்றுள்ளன. அவை, உரிமம்பெற்ற வர்த்தக வங்கிகள், உரிமம்பெற்ற சிறப்பியல்வு வாய்ந்த வங்கிகள், உரிமம்பெற்ற நிதிக் கம்பனிகள் மற்றும் சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் என்பனவாகும். நிதிக் குத்தகைக்குவிடும் சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட்ட சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகளின் ஒழுங்குமுறைப்படுத்தல் மற்றும் மேற்பார்வைத் தொழிற்பாடுகள் இலங்கை மத்திய வங்கியினால் மேற்கொள்ளப்படுகின்றன.
சிறப்பியல்பு வாய்ந்த குத்தகைக்குவிடும் கம்பனிகள் பொதுமக்களிடமிருந்து வைப்புக்களாக பணத்தினை ஏற்றுக்கொள்ள அனுமதிக்கப்படவில்லை. எனினும், இலங்கை மத்திய வங்கியின் முன்கூட்டிய அனுமதியுடன் அவை வாக்குறுதிச் சான்றிதழ்கள், வர்த்தகப் பத்திரங்கள் மற்றும் தொகுதிக் கடன்கள் போன்ற படுகடன் சாதனங்களை வழங்குவதன் மூலம் பணத்தினைக் கடனாகப் பெற்றுக்கொள்ளலாம்.
இலங்கையின் பதிவுசெய்யப்பட்ட நிதி குத்தகைக்குவிடும் நிறுவனங்களின் பட்டியல்